தமிழின் முன்னணி நடிகரான சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் “சமஜம்லோ ஸ்த்ரீ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “கண் சிமிட்டும் நேரம்”, “சட்டத்தின் மறுபக்கம்” போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
பிரபலமான வில்லன்
இத்திரைப்படங்களை தொடர்ந்து விஜயகாந்த் நடித்த “புலன் விசாரணை” திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார் சரத்குமார்.
இவ்வாறு மிகவும் பிரபலமான வில்லன் நடிகராக அறியப்பட்ட பின் பல திரைப்படங்களில் வில்லனாக ஒப்பந்தமானார் சரத்குமார். இந்த காலகட்டத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தனது முதல் திரைப்படமான “புரியாத புதிர்” திரைப்படத்தில் சரத்குமாரை ஒரு சிஐடி அதிகாரி கதாப்பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.
கீழே விழுந்த சரத்குமார்
இதனிடையே தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த “பாலச்சந்துருடு” என்ற திரைப்படத்தில் சரத்குமார் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு காட்சியில் 60 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார் சரத்குமார். இதனால் அவரது முதுகெழும்பு பாதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு பல மாதங்கள் படுத்த படுக்கையானார் சரத்குமார். கழுத்தை கூட திருப்ப முடியாமல் இருந்தார். ஆதலால் அவரை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் பலரும் அவருக்கு கொடுத்த அட்வான்ஸை திரும்ப பெற வந்தனர்.
கே.எஸ்.ரவிக்குமாரின் பெருந்தன்மை
அப்போது “புரியாத புதிர்” திரைப்படத்திற்கு சரத்குமாரை ஒப்பந்தம் செய்திருந்த கே.எஸ்.ரவிக்குமார் அவரை சந்திக்கச் சென்றார். கே.எஸ்.ரவிக்குமாரும் அட்வான்ஸை திரும்ப பெறத்தான் வந்திருக்கிறார் என நினைத்தாராம் சரத்குமார்.
இதையும் படிங்க: “தம் அடிச்சா வெளுத்துப்புடுவேன்”… பிரபல நடிகரை மிரட்டிய விஜயகாந்த்… யார்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
ஆனால் கே.எஸ்.ரவிக்குமாரோ “நீங்கள்தான் இந்த படத்தில் நடிக்கிறீர்கள். எவ்வளவு மாதம் ஆனாலும் பரவாயில்லை. குணமாகி வாருங்கள்” என கூறினாராம்.
நெகிழ்ச்சியில் சரத்குமார்
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சரத்குமார் “நான் படுத்த படுக்கையாக இருந்தபோது ஒரு பத்திரிக்கையில் ‘சரத்குமாரின் கலை பயணம் முடிந்துவிட்டது’ என எழுதினார்கள். என்னை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் என்னிடம் அட்வான்ஸை திருப்பி வாங்க வந்தனர். அப்போது கே.எஸ். ரவிக்குமார் சாரும் ஒரு நாள் வந்தார்.
என்னால் அப்போது பேசமுடியாமல் இருந்ததால் ‘நீங்களும் என்னிடம் அட்வான்ஸை திரும்ப பெற வந்துருக்கீங்களா?’ என எழுதி காண்பித்தேன். அதற்கு அவர் ‘இல்லை. அந்த படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீங்க. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்ல. நான் வெயிட் பண்ணி எடுக்குறேன்’ என கூறினார். அவருக்கு அது முதல் படம். அப்படியும் அவர் நான் குணமாகி வரும் வரை காத்திருந்து எனது காட்சிகளை எடுத்தார். அந்த சம்பவத்தை என்றைக்கு நினைத்து பார்த்தாலும் எனக்கு கண்ணீர் வரும்’ என கூறியது குறிப்பிடத்தக்கது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…