ஜென்டில்மேன் படத்திற்கு அடித்தளம் போட்டது நான்..! நடந்த பிரச்சினையில் நடிக்க முடியாமல் போன சரத்..

by Rohini |
sarath_main_cine
X

சுப்ரீம் ஸ்டார் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் சரத்குமார். இவரின் 80 களில் வந்த படங்கள் எல்லாமே ஆக்‌ஷன் கலந்த படமாகவும் கமெர்ஷியல் படமாகவும் வந்து மக்களை ரசிக்க வைத்துள்ளது. இவரின் கெரியரில் சூரியன் படம் தான் ஒரு திருப்பு முனையாக இருந்தது. அதுவரை வில்லன் கதாபாத்திரத்திலயே நடித்து கொண்டிருந்தவர் இந்த படம் மூலம் இனங்கானம் பட்டு தத்ரூப நடிகராக வளர்ந்தார்.

sarath1_cine

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இவரை வைத்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தார். இவர் நடித்த சூர்யவம்சம் இன்று வரை குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக திகைத்து நிற்கின்றது. இவர் சூர்யன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படத்தில் இயக்குனர் ஷங்கர் அச்சிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்தாராம். சூர்யன் படத்தில் வேலை பார்க்கும் போதே ஷங்கருக்கும் அந்த இயக்குனருக்கும் இடையே மோதல்கள் வெடிக்குமாம். அதனால் அந்த படத்தில் இருந்து ஷங்கர் தனியே வந்து விட்டாராம்.

sarath2_Cine

ஷங்கரின் திறமையை கண்டு இயக்குனர் குஞ்சு மோகனிடம் ஷங்கர் ஒரு கதை வைத்திருக்கிறார். அவர் படத்தை நாம் சேர்ந்து பண்ணுவோம் என்று கூறினாராம் சரத்குமார். ஆனால் சூரியன் படத்தின் இயக்குனர் பவித்ரனுக்கும் குஞ்சுமோகனுக்கும் இடையே இருந்த பிரச்சினையால் சரத்குமாரின் பிறந்த நாளன்று பவித்ரன் மீண்டும் சரத்தை வைத்து எடுக்கும் ஐ லவ் இந்தியா படமும் ஷங்கர் எடுக்கபோகும் படமும் ஒன்றாக ரிலீஸாக வேண்டும் என கூறினாராம்.

sarath3_cine

பவித்ரன் மீசையை வை என்று கூற குஞ்சுமோகன் மீசையை வலி என்று கூற சரத் என்ன செய்வதென்று தெரியாமல் பவித்ரன் ஏற்கெனவே ஹிட் படமான சூர்யன் படத்தை கொடுத்தார். ஆதலால் ஐ லவ் இந்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஷங்கர் படத்திற்கு ஐடியா கொடுத்தும் சரத்தால் நடிக்க முடியவில்லையாம். அதுவே அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் படமாகும்.ஆனால் ஜென்டில்மேன் படத்திற்காக சரத்குமார்க்கு போட்டோ சூட் எல்லாம் எடுத்து தயாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story