சூர்யவம்சம் படத்தின் ஹீரோவே இவர்தான்... சரத் எப்படி வந்தாருனு தெரியுமா..? உண்மையை உடைத்த விக்ரமன்..
காலத்திற்கும் அழியாத படங்களில் மிக முக்கியமானது விக்ரமன் இயக்கிய ‘சூர்யவம்சம்’ திரைப்படம். இந்த படத்தை ஆர்பி.சௌத்திரி தயாரித்திருந்தார். இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, பிரியாராமன், சுந்தர் ராஜன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
பல தலைமுறைகளை தாண்டினாலும் இந்த படத்தை நினைக்கும் போது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் இந்த திரைப்படம் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 25 வருடங்கள் நிறைவடைந்து இன்றும் சூர்யவம்சம் திரைப்படத்தை நாம் நினைவு கூர்ந்து வருகிறோம்.
ஆனால் இந்த திரைப்படத்தில் சரத்குமார் திடீரென வந்ததாக இயக்குனர் விக்ரமன் தெரிவித்தார். கதையை தயார் செய்து வைத்திருக்கும் நிலையில் சௌத்திரி விக்ரமனை அழைத்து சரத்குமாருக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என கூற விக்ரமன் ஏற்கெனவே தான் எழுதி வைத்திருந்த கதையை சௌத்திரியிடம் கூறினாராம்.
ஆனால் சௌத்திரிக்கு அதில் உடன்பாடே இல்லையாம். ஆனால் வலுக்கட்டாயமாக விக்ரமன் சொன்னதால் தான் இந்த சூர்யவம்சம் படம் தயாரானது. ஆனால் இந்த படத்தின் கதையை நடிகர் கார்த்திக்கை மனதில் வைத்துதான் எழுதினேன். சரத்குமாருக்காக இல்லை. சௌத்திரி கூறியதால் தான் சரத்குமாருக்கு இந்த கதை தயாரானது என கூறினார்.