ஷங்கரின் பிரம்மாண்ட வெற்றி படத்தில் இருந்து விலகிய சரத்குமார்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

by Arun Prasad |   ( Updated:2023-02-20 07:30:33  )
Shankar
X

Shankar

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர், “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றி இயக்குனராக உருவானார் ஷங்கர். இந்த நிலையில் “ஜென்டில்மேன்” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Gentleman

Gentleman

இயக்குனர் ஷங்கர், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தொடக்கத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது இயக்குனர் பவித்ரனும், எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

அதன் பின் பவித்ரன், எஸ்.ஏ.சியிடம் இருந்து வெளிவந்து “வசந்தகால பறவை” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “சூரியன்” என்ற திரைப்படத்தையும் பவித்ரன் இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஹீரோ சரத்குமார்தான்.

Pavithran

Pavithran

பவித்ரன், எஸ்.ஏ.சியிடம் இருந்து வெளிவந்தவுடன் ஷங்கர், பவித்ரனிடம் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றத் தொடங்கினார். இந்த நிலையில் “சூரியன்” திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் தனியாக படம் இயக்க வேண்டும் என முடிவு செய்து, “ஜென்டில்மேன்” படத்தின் கதையை எழுதினார்.

ஏற்கனவே சரத்குமார் நடித்த “சூரியன்” திரைப்படத்தில் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றியிருந்ததால் சரத்குமாரிடம் அப்போதே அறிமுகம் ஏற்பட்டிருந்தது. ஆதலால் தனது உதவியாளரான ஏ.வெங்கடேஷ் சொன்ன ஆலோசனையின்படி ஷங்கர், “ஜென்டில்மேன்” திரைப்படத்திற்காக சரத்குமாரை அணுகினார்.

Sarathkumar

Sarathkumar

“ஜென்டில்மேன்” கதை சரத்குமாருக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆனால் அப்போது வரை எந்த தயாரிப்பாளரையும் ஷங்கர் அணுகவில்லை. இப்படி இருக்க, இயக்குனர் பவித்ரன் ஏற்கனவே தயாரிப்பாளர் குஞ்சுமோனின் தயாரிப்பில் சில படங்களை இயக்கியிருந்தார்.

எனினும் ஒரு கட்டத்தில் குஞ்சுமோனுக்கும் பவித்ரனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது ஏ.வெங்கடேஷ், ஷங்கரிடம் “ஜென்டில்மேன் கதையை குஞ்சுமோனிடம் கொண்டு செல்வோம்” என கூறியிருக்கிறார். ஆனால் ஷங்கருக்கு ஒரு தயக்கம் இருந்திருக்கிறது.

K.T.Kunjumon

K.T.Kunjumon

அதாவது தனது குருநாதரான பவித்ரனுக்கும் குஞ்சுமோனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில் எப்படி நாம் இந்த மனஸ்தாபத்தை தன்னுடைய லாபத்துக்கு பயன்படுத்திக்கொள்வது என எண்ணினாராம். ஆனால் ஏ.வெங்கடேஷோ ஷங்கருக்கு ஊக்கம் கொடுக்க, குஞ்சுமோனை சென்று சந்தித்தாராம் ஷங்கர்.

ஷங்கர் கூறிய கதை குஞ்சுமோனுக்கு பிடித்துப்போக, உடனே ஒரு குறிப்பிட்டத் தொகையை அட்வான்ஸாக கொடுத்தாராம். ஆனால் இதே வேளையில் பவித்ரன், “ஐ லவ் இந்தியா” என்ற திரைப்படத்தில் சரத்குமாரை ஒப்பந்தம் செய்வதற்காக அணுகியிருக்கிறார்.

Sarathkumar

Sarathkumar

தன்னை வைத்து ஏற்கனவே “சூரியன்” என்ற மிகப் பெரிய ஹிட் கொடுத்த பவித்ரனுக்கு ஓகே சொல்வதா?, இல்லை புது இயக்குனரான ஷங்கருக்கு ஓகே சொல்வதா? என குழப்பமடைந்தாராம் சரத்குமார். எனினும் ஏற்கனவே தன்னை வைத்து ஹிட் கொடுத்த பவித்ரனுக்கே ஓகே சொன்னாராம் சரத்குமார்.

Gentleman

Gentleman

அதனை தொடர்ந்து நவரச நாயகன் கார்த்திக் உட்பட பல நடிகர்களை “ஜென்டில்மேன்” திரைப்படத்திற்காக அணுகினார் ஷங்கர். எனினும் ஒரு வழியாக அர்ஜூன் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

Next Story