Connect with us
sarathkumar

Cinema News

ஒரு நடிகர்கிட்ட கேட்க கூடாத கேள்வி! பொங்கி எழுந்த சரத்குமார்.. அப்படி என்னத்த கேட்டாங்க

Sarathkumar: சினிமாவில் ஒரு சுப்ரீம் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகர் சரத்குமார் சூரியன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் பெருமளவு வரவேற்பை பெற்றது. சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலிங்கிலும் இருந்தார்.

சிறந்த ஆணழகன் பட்டத்தையும் வென்றவர். பத்திரிக்கையிலும் சிறந்த அனுபவம் மிக்கவராக இருந்தவர் சரத்குமார். இவருக்கு திருப்பு முனையாக அமைந்த படங்களாக புலன் விசாரணை திரைப்படம் அமைந்தது. அதை போல கேப்டன் பிரபாகரன் படமும் நல்ல ஒரு பேரை பெற்றுக் கொடுத்தது.

இதையும் படிங்க: சஸ்பென்ஸ் இல்லாமலே சாவு… கோட் படத்தின் மீது ரஜினிக்கு இவ்வளவோ வன்மமா?

அதற்கு காரணம் விஜயகாந்த். சின்ன கேரக்டரானாலும் சிறப்பாக நடித்திருந்தார் சரத்குமார். தொடர்ந்து குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றார் சரத்குமார். சூரியவம்சம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

அதை போல் நாட்டாமை படம் என்றென்றும் காலத்தை வென்ற திரைப்படமாக மாறியது. இந்த இரு படங்கள் சரத்குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் சரத்குமார்.

தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதை போல் போர்த்தொழில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோவை விட அவருக்குத்தான் அதிக வரவேற்பு கிடைத்தது.

இதையும் படிங்க:எஸ்.கே.வுக்காக கமல் எடுக்கும் பெரிய ரிஸ்க்!.. எங்க போய் முடியுமோ தெரியலயே!..

இந்த நிலையில் சரத்குமாரை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறினார். சமீபத்தில் விக்ரமிடம் நிருபர் ஒருவர் ஏன் டாப் 3ல் உங்களால் வரமுடியவில்லை என்ற ஒரு கேள்வியை கேட்டு தர்மசங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டார் விக்ரம்.

இதை பற்றி அந்தணன் ‘இந்த கேள்வியை தவிர்த்திருக்க வேண்டும். நடிகரிடம் இந்த மாதிரியான கேள்விகளை கேட்கவே கூடாது. இதை போல ஒரு கேள்வியைத்தான் சரத்குமாரிடமும் கேட்டு அவரை கோபப்படுத்தினார்கள். அதாவது சரத்குமாரை பார்த்து நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? கண்ணுக்கு கீழ் கருவளையம் இருக்கிறதே’ என்றெல்லாம் கேட்டார்களாம்.

இதையும் படிங்க: எதிர்பார்த்து நான் எதுவும் பண்ணலை… சிவா மூக்கை உடைத்த தனுஷ்… முடிச்சிவிட்டாரே!

ஒரு நடிகரிடம் இந்த மாதிரி கேட்கவே கூடாது. இதை கேட்டதும் சரத்குமார் மிகுந்த கோபத்திற்கு ஆளானாராம். கேள்வி கேட்ட அந்த நபரை ஒரு வழி பண்ணி விட்டார் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top