அய்யோ ஆளவிடுங்கப்பா!.. சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. ரஜினியிடமே விளக்கத்தை சொல்லிட்டேன்.. சரத்குமார் எஸ்கேப்!..

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் சரத்குமாருக்கு அவர் கேட்டதை விட சிறப்பான சம்பளமும் கிடைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் புகழ்ந்து பேச நினைத்த சுப்ரீம் ஸ்டார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னணி நடிகர் ஒருவரே விஜய்க்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை கொடுத்து விட்டாரே என்றும் ரஜினிகாந்த் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் சரத்குமார் தளபதி விஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்கி அழகுப் பார்த்துள்ளார் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் சர்ச்சைகளும் வெடித்தன.

இதையும் படிங்க: இதுதான் புள்ளி விபரம்!.. யார் பருந்து?.. யார் காக்கா?.. ரஜினியை விடாமல் விரட்டும் புளூசட்டமாறன்…

சூப்பர்ஸ்டார் சர்ச்சை:

அப்போதே நடிகர் சரத்குமார் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மீடியாக்கள் மைக்கை நீட்டி ரஜினிகாந்த் இன்னமும் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போது அவரது சூப்பர்ஸ்டார் பட்டத்தை எப்படி விஜய்க்கு கொடுக்கலாம் என கேட்க, சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது அனைத்து மாநிலங்களிலும் பல நடிகர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என பேசியிருந்தார்.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா - கழுகு கதை விஜய்க்கு இல்லை என்றும் ரஜினிகாந்தை வீழ்த்த முடியாமல் தவித்து வரும் சரத்குமார் உள்ளிட்ட ஹேட்டர்களுக்குத்தான் என ரசிகர்கள் ரூட்டை திருப்பிப் போட சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது மீண்டும் சரத்குமாரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி 68 பூஜையே போடல!.. அதுக்குள்ள இத்தனை கோடிக்கு போனியாகிடுச்சா!.. ஆனால், விஜய் காரணம் இல்லையாம்!..

ரஜினிகாந்திடம் விளக்கம் கொடுத்த சரத்குமார்:

இதுக்கு மேலயும் பாடி தாங்காது என நினைத்த சரத்குமார் டாப் ஹீரோவாக வலம் வருபவர்களை சூப்பர்ஸ்டார் என்று சொல்வது வழக்கம். தம்பி விஜய்யை அந்த நோக்கத்துடன் தான் சொன்னேன். நடிகர் ரஜினிகாந்தை மட்டம் தட்டி பேச வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல, இதுகுறித்து கொஞ்ச நாள் முன்னாடி ரஜினியிடமே பேசிவிட்டேன். அவர், நீங்க அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்கன்னு சொல்லிட்டார் என சரத்குமார் சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து ரஜினியிடமே விளக்கம் அளித்து விட்டதை பகிர்ந்துள்ளார்.

பொன்னியின் செல்வன், வாரிசு, ருத்ரன், போர் தொழில் என தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் சரத்குமார் சூர்யவம்சம் 2 படத்தை உருவாக்கும் முயற்சியிலும் படு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி vs விஜய்! சூப்பர்ஸ்டார் பட்டமே நிரந்தரமில்லை – ஏன்டா போட்டி போடுறீங்க? கடுப்பான சேரன்

 

Related Articles

Next Story