வெறுப்பத்தான் காட்டுவீங்கனு பாத்தோம்!.. கார்த்திக்கிற்கு கட் அவுட் வைத்த அந்த சூப்பர் ஹீரோ!..
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்படுபவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தன் கலைப்பயணத்தை தொடங்கியவர் இன்று வரை ஒரு குணச்சித்திர வேடங்களில் எப்படியாவது தன் முகத்தை காட்டிக் கொண்டு வருகிறார்.
கார்த்திக்கின் முதல் படம்
அலைகள் ஓய்வதில்லை படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்தியே இல்லை. ஒரு வித விபத்தால் கார்த்திக் நாயகன் ஆனார். இல்லையென்றால் அவரை நாம் பார்த்திருக்க முடியாது. ரசிகைகளை தவிர்த்து சினிமா உலகில் இருக்கும் நடிகைகளுக்கும் பிடித்தமான ஹீரோவாகவே கார்த்திக் திகழ்ந்தார்.
தொடர்ந்து காதல் படங்களையே பண்ணிக் கொண்டிருந்த கார்த்திக் அக்னி நட்சத்திரம் படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்தில் முரட்டு கோப இளைஞனாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் நடித்த முடித்த கையோடு சரத்குமார் தயாரிப்பில் கண்சிமிட்டும் நேரம் படத்தில் நடிக்க கார்த்திக்கிற்கு வாய்ப்பு வந்தது.
தயாரிப்பு பணியில் சரத்குமார்
சரத்குமார் தயாரிப்பதோடு மட்டும் இல்லாமல் கண்சிமிட்டும் நேரம் படத்திலும் நடிக்கவும் செய்தார். சொல்லப்போனால் அந்த படம் தான் சரத்குமாருக்கு தமிழில் முதல் படமாகும். அதற்கு முன் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருந்தார்.
கண்சிமிட்டும் நேரம் படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிகை அம்பிகா நடித்தார். படம் ஓரளவு நன்றாக போனாலும் வசூலில் சாதனை படைக்கவில்லை. காரணம் எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்று சரத்குமார் கூறினார்.
65 அடியில் கட் அவுட்
மேலும் அந்த பட ரிலீஸ் சமயத்தில் ஈகா திரையரங்கில் கார்த்திக்கிற்கு 65 அடியில் முதன் முதலில் கட் அவுட் வைத்ததே நான் தான் என்று சரத்குமார் கூறினார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும் அதை தொடர்ந்து ஹீரோவாக பல படங்கள் ஹிட்டும் கொடுத்து சுப்ரீம் ஸ்டாராக விளங்கினார் சரத்குமார்.
அவர் பேச்சிலும் சரி நடத்தையிலும் சரி ஒரு கம்பீரம் தெரியும். ஆனால் அடிப்படையில் ஒரு நகைச்சுவை மிக்க மனிதர் என்று பல பேர் கூறியிருக்கின்றனர்.