எனக்கு ஒரு பிரச்னைனா ஓடி வரும் மனிதன் அவர்தான்.! சரத்குமார் உருக்கம்.!

Published on: March 12, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல திரைப்பிரபலங்கள் திரையுலகை தாண்டி நிஜ உலகிலும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதற்கு பலரை உதாரணமாக எடுத்து கூறலாம். விஜய் – சஞ்சீவ், சிம்பு – மகத் என பலரை இந்த லிஸ்டில் சேர்த்து விடலாம்.

இதில் 90’s கலாகட்டத்தில் இருந்து தற்போது வரை நண்பர்களாக இருந்து வரும் பிரபலங்கள் என்றால் அது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சரத்குமார். இவர்களின் நட்பு கே.எஸ்.ரவிக்குமார் இரண்டாவது படமாக இயக்கிய சேரன் பாண்டியன் படத்திலிருந்து தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு விபத்து ஏற்படவே,

இதையும் படியுங்களேன் – என்கிட்ட உன் பாட்ஷா பலிக்காது மகனே.! சிவகார்த்திகேயனை கதறவிட்ட உச்ச நட்சத்திரம்.!

அவரால் சினிமாவில் அந்த சமயம் நடிக்க முடியவில்லை. அப்போதுதான் நாட்டாமை திரைப்படத்தின் கதையை சரத்குமாருக்காக எழுதி வைத்திருந்தார். பின்னர் சரத்குமாரின் உடல்நிலை சரியான பின்னர் இந்த படத்தை எடுத்து கொள்கிறேன் என்று அவருக்காக காத்திருந்து அந்த படத்தை எடுத்து முடித்தார்.

இதனை சரத்குமார் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சினிமாவிலோ அல்லது பண விஷயத்திலோ அல்லது எனக்கு மனது சரியில்லை என்றாலோ உடனே நான் போன் செய்து வர சொன்ன உடனே வரும் நபர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் தான் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment