அமீர்கான் முதல் அட்லி வரை!.. சரத்குமார் எடுத்துக்கொண்ட செல்ஃபியில் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!..

நடிகர் சரத்குமார் நேற்று மும்பையில் நடந்த வேவ்ஸ் மாநாட்டில் கலந்துக்கொண்டு பிரபல நடிகர் நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வேவ்ஸ் மாநாடு என்பது உலகளாவிய மீடியா, சினிமா, ஆடியோ, வீடியோ, மற்றும் பொழுதுபோக்கு துறைகளை ஒருங்கிணைத்து, இத்துறைகளில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மற்றும் வணிக வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கும் ஒரு முக்கிய தளமாகும்.

இந்த மாநாடு, திரைப்படம், ஊடகம், மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள முன்னணி நிபுணர்கள், கலைஞர்கள், மற்றும் தொழிலதிபர்களை ஒன்றிணைத்து, துறைசார் வளர்ச்சிக்கு உதவுவதற்காக விளங்குகிறது. மேலும், இந்த மாநாடு நேற்று தொடங்கியிருந்தாலும் இன்று முதல் மே 5ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நரேந்திர மோடியுடன் ஷாருக்கான், தீபிகா படுகோனே, சிரஜ்சீவி, ராஜமௌளி, ரன்வீர் கபூர், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், குஷ்பு, மோகன்லால், எ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் சரத்குமார் அமீர்கான், ஜாக்கி ஷராப், மோகன்லால், சிரஞ்சீவி, குஷ்பு, அட்லி, ஸ்ரீலீலா ஆகிய நடிகர் நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும், அதில் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த விழாவில் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். நமது படைப்பாளிகள் உலக பொழுதுப்போக்கு மன்றத்தில் போட்டியிடுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், உச்சிமாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.