நமக்கெல்லாம் இது எப்போ நடக்கும்!.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபீல் பண்ணி சாதித்து காட்டிய சரத்குமார்!..
வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் அறிமுகமானவர்தான் சரத்குமார். பாடி பில்டிங் செய்து மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். இவர் சினிமாவில் நடிக்க துவங்கியது வில்லனாகத்தான். புலன் விசாரணை படத்தில் இவரை வில்லனாக அறிமுகம் செய்து வைத்தவர் விஜயகாந்த்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் வில்லனாக நடித்த இவரை ஹீரோ ஆக்கியதும் விஜயகாந்துதான். அவரின் சொந்த தயாரிப்பில் உருவான தாய் மொழி என்கிற படத்தில்தான் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார் சரத்குமார். அதன்பின் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வந்த சரத்குமார் ஒருகட்டத்தில் ஹீரோவாக மட்டுமே நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்
அப்போது அவருக்கு கை கொடுத்தவர்தான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக என சரத்குமாரை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதேபோல், விக்ரமனின் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. 100 படங்களுக்கும் மேல் நடித்தார். கடந்த சில வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சரத்குமாரை வைத்து பல திரைப்படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரி ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நான் சரத்குமாரை வைத்து பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறேன். அவரை வைத்து நான் எடுத்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்தான்.
இதையும் படிங்க: எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..
அவரின் 100வது படத்தை நான் தயாரிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. சேரன் பாண்டியன் படப்பிடிப்பு நடக்கும் போது படப்பிடிப்பில் ஆனந்த்பாபுவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவார்கள். அதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார் சரத்குமார். ஆனால், மெல்ல மெல்ல உயர்ந்து முன்னணி நடிகராக மாறி அவரும் ரசிகர்கள் பலரையும் பெற்றார். அவரின் வளர்ச்சி அசுரத்தனமானது’ என கூறியிருந்தார்.
இப்போது பல படங்களில் சரத்குமார் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் படத்திலும் சரத்குமார் நடித்திருந்தார். அதோடு, போலீஸ் அதிகாரியாக அவர் நடித்திருந்த போர்த்தொழில் படமும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.