
Cinema History
விஜயை அன்றே கணித்த சரத்குமார்… அட அது எல்லாமே நடந்துடுச்சே!…

பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். இந்த படம் தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாராக உள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு தமான் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.தளபதி 66 படத்தின் பூஜையில் சரத்குமார் கலந்து கொண்டார். இந்த படத்தில் விஜய்யின் அப்பா ரோலில் தான் சரத்குமார் நடிக்க போகிறாராம்.
தளபதி 66 படம் பற்றி கூறிய சரத்குமார், தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும்.
அப்போது சூர்யவம்சம் படத்தின் 250வது நாள் விழா சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது நாங்கள் சந்தித்தது பற்றியும் பேசினோம். அந்த விழாவில் நான் மேடையில் பேசிய போது கூறினேன், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று. அன்று நான் சொன்னது போலவே நடந்து விட்டது.
எப்படி அப்படி சரியாக கணித்து சொன்னேன் என தெரியவில்லை. ஆனால் நான் சரியாக கணித்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதை அவரும் நினைவு வைத்திருந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்றார் சரத்குமார்.
