ஒரு ஹிட்டு வந்தா இப்படியா!. பழச நினைச்சு பாரு நாட்டாமை!.. புலம்பும் தயாரிப்பாளர்...

வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் அறிமுகமாகி பின்னர் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்தவர் சரத்குமார். புலன் விசாரணை படத்தில் அவரை வில்லனாக விஜயகாந்த் நடிக்க வைத்தார். கேப்டன் பிரபாகரனிலும் ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். அதன்பின் பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார்.
90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் சரத்குமார் இருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த சூரியன், சூர்ய வம்சம்,, நாட்டாமை, சேரன் பாண்டியன், நட்புக்காக என பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருந்த காலம் அது.
இதையும் படிங்க: சரத்குமாருக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் வெடித்த மிகப்பெரிய சண்டை… அதுக்கு காரணம் இது தான்… இதெல்லாம் ஓவருல!
ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கான மார்க்கெட் குறைந்து திரைப்படங்களில் அதிகம் நடிக்கவில்லை. அவ்வப்போது சில படங்கள் வெளியாகும். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். வாரிசு படத்தில் விஜயின் அப்பாவாக கூட நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் சரத்குமார் ஒரு சிறிய வேடத்தில் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் அவருக்கு வாய்ப்புகள் வரதுவங்கியது.
அப்படி வெளியான கிரைம் திரில்லர் படம்தான் போர்த்தொழில். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இப்படத்தின் வெற்றி சரத்குமாரை மீண்டும் பிஸி நடிகராக மாற்றிவிட்டது. சரத்குமார் மார்க்கெட் டவுனில் இருந்த போது அவரை வைத்து சூரியன் படத்தை தயாரித்தவர் அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்த குஞ்சுமோன்தான்.
இதையும் படிங்க: ரஜினிக்கு இணையான ஆளுனா அது இவங்கதான்! போற போக்குல அடுத்த சர்ச்சையை கிளப்பிய சரத்குமார்
ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் என கோடிகளை கொட்டி பணமெடுத்தவர். ஆனால், ரட்சகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து நஷ்டமடைந்து சினிமா தயாரிப்பதையே நிறுத்திவிட்டார். இப்போது பலவருடங்கள் கழித்து ஜென்டில்மேன் 2 படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் அவர் மகனே ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்கவிழா சமீபத்தில் நடந்தது.
இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், போர்த்தொழில் ஹிட்டுக்கு பின் மனம் மாறிய சரத்குமார் குஞ்சுமோனிடம் ‘இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். சின்ன வேடத்தில் நடிக்கமாட்டேன்’ என சொல்லிவிட்டாராம். மேலும், ஜென்டில்மேன் 2 பட விழாவிலும் சரத்குமார் கலந்துகொள்ளவில்லையாம்.
சரத்குமாருக்கு சூரியன் எனும் ஹிட் படத்தை கொடுத்து தூக்கிவிட்டேன். இப்போது இப்படி பேசுகிறார் என புலம்பி வருகிறாராம் குஞ்சுமோன்.
சினிமாவுல இதெல்லாம் சகஜம்!...
இதையும் படிங்க: கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடியா?!.. விஜய்க்கு எமனாக வந்த சித் ஸ்ரீராம்.. அட போங்கப்பா!…