ஆடியோ லாஞ்சிற்கு பாலிவுட் குயினை அணுகிய லெஜெண்ட்....இருந்தாலும் நம்ம அண்ணாச்சிக்கு குசும்பு ஜாஸ்திதான்...!
சினிமாவிற்கு அழகு முக்கியம் இல்லை. திறமைதான் முக்கியம் என்ற நோக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறார் நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி. சமீபத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படத்தை பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளனர் படக் குழு. லெஜெண்ட் என பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நாசர் முதல் யோகிபாபு வரை திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் இரண்டு சிங்கிள்களும் வெளியான நிலையில் அண்ணாச்சி ஹேப்பியோ ஹேப்பியோ ரசிகர்களின் வரவேற்பால். மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவிற்கு நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர். தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே உட்பட பலரும் கலந்து கொண்டு படத்தினை பற்றியும் அண்ணாச்சியை பற்றியும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்தனர். இந்த நிலையில் இந்த ஆடியோ விழாவிற்கு கிட்டத்தட்ட 6.50 கோடி வரை செலவாகியுள்ளதாம். சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் கலந்து கொண்ட நடிகைகளுக்கு கணிசமான தொகை சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அண்ணாச்சி பாலிவுட்டில் இருந்தும் நடிகை காத்ரீனா கைஃப்பயும் விழாவிற்கு அழைத்ததாக குறிப்பிடப்படுகிறது.அவருக்கு 3 கோடி வரை பேரம் பேசப்பட்டு முன்பண தொகையும் கொடுத்தாகி விட்டதாம். ஆனால் சொன்ன தேதியில் அவரால் வர முடியவில்லையாம். அதனால் காத்ரீனா அந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டாராம். அண்ணாச்சினா அண்ணாச்சிதான்.