மொத்தமா 10 ஹீரோயின்கள்.! நடுவில் முரட்டு காளையாக நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் வாங்கிட்டு வந்துருங்க..,
தமிழ் சினிமாவில் இந்த படம் அளவுக்கு ஒரு அறிமுக ஹீரோ படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமா என இருந்ததா என்றால் அது சந்தேகமே. அந்தளவுக்கு எதிர்பார்க்க வைத்துள்ளது நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடித்துள்ள லெஜெண்ட் திரைப்படம்.
இந்த படம் எப்படி தான் இருக்கும், அதில் நம்ம அண்ணாச்சி எப்படி தான் நடித்துள்ளார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்றே கூற வேண்டும் . இந்த திரைப்பாதை ஜேடி& ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்று கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் - நான் டீ கடை வைச்சி பொழைச்சிப்பேன்.! ரெட் கார்டு பஞ்சாயத்தை அலறவிட்ட எஸ்.ஜே.சூர்யா.!
தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக முதற்கட்டமாக இந்த நிகழ்ச்சியில் பங்கற்க வரும் நடிகைகள் யார் யாரெனெ போட்டோவுடன் அறிவித்து இருக்கிறார்கள். 10 ஹீரோயின்கள் அந்த பக்கம் 5 இந்த பக்கம் 5 என நடுவில் நம்ம அண்ணாச்சி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.
அதில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ரவுடேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனராம். அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.