
Cinema News
நம்ம அண்ணாச்சி மனசு வச்சதுனால கமலுக்கு கிடைத்த பெரும் நிம்மதி.!? இல்லனா அவ்வளோதான்.!
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம். ஜூன் 3ஆம் தேதி இந்த படம் உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்து உள்ளார். கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டன. அதுவும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா நடைபெறும் அறிவிக்கப்பட்டு விட்டது.
நேரு உள்விளையாட்டு அரங்கம் என்பதாலும், கமல்ஹாசன் படம் என்பதாலும் இந்த விழாவிற்கு பெரிய பெரிய திரைபிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேலும் ஒரு ஷாக்கிங் செய்தி கிடைத்துள்ளது.
இதையும் படியுங்களேன் – லோகேஷுக்கு முட்டுக்கட்டை போட்ட கமல்.! விஜய் 67 நடக்குமானு தெரியலையே.?!
அதாவது,அதே தினத்தில் அதே நேரு உள்விளையாட்டு அரங்கில் ஓர் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்ததாம். அது யார் என்றால் நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடித்துள்ள லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா தான் நடைபெற இருந்ததாம்.
ஆனால், கமல் பட விழா அங்கு அதே தேதியில் நடக்க உள்ளது என்பதை அறிந்த லெஜண்ட் படக்குழு அந்த தேதியை மாற்றிவிட்டனராம். இதனால் வேறு ஒரு நாளில் அதே நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக அண்ணாச்சியின் லெஜண்ட் பட பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.