சூர்யாவுக்கே விபூதி அடிச்ச நம்ம அண்ணாச்சி.! இதுல என்னயா செஞ்சி வச்சிருக்கீங்க.?!

தமிழ் சினிமா ரசிகர்கள் அண்மையில் ஒருவரை அதிகமாக ட்ரால் செய்ததும் இவரையாக தான் இருக்கும். அதே போல, ஒருவரது வளர்ச்சியை பார்த்து, வாய்ப்பிளந்ததும் இவரை தான் இருக்கும். அவர் வேறு யாருமல்ல நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தான். இவர் ஏன் நடிக்க வந்தார் என்று கூறியவர்களை தனது படத்தின் முதல் பாடலை முணுமுணுக்க வைத்தவர் சரவணன் அண்ணாச்சி.
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தி லெஜண்ட். இந்த திரைப்படத்தை விசில் படத்தை இயக்கிய ஜேடி - ஜெர்ரி எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் மற்ற வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி விட்டது. மொசலோ மொசலோ எனும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்களேன் - தயவு செய்து விஜய் சேதுபதியை நம்பாதீங்க.., எல்லார்கிட்டையும் 'இதையே' தான் சொல்றார்.!
தற்போது அடுத்த பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு விட்டது. அடுத்த பாடல் வாடி வாசல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 20ஆம் தேதி இப்பாடல் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை கேட்ட சூர்யா ரசிகர்கள் சற்று அதிர்ந்து விட்டனர் என்றே கூறலாம்.
ஏனென்றால் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் திரைப்படம் தயாராகி வருகிறது. தற்போது அதே பெயரில் ஒரு பாடலை அண்ணாச்சியின் லெஜெண்ட் படக்குழுவும் வெளியிட தயாராகி விட்டது.
மொசலோ மொசலோ பாடல் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வாடிவாசல் பாடலும் வரவேற்பை பெறுமா என்பதை மே 20ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.