சரவணா ஸ்டோர்ஸ் எலைட்-ல் MMTC PAMP -ன் 24 K தரத்தின் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனை..
லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியாவில் MMTC PAMP INDIA PRIVATE LIMITD நிறுவனத்தால் தரமாக தயாரிக்கப்படும் 9999 (24KT) தரத்திலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் T. Nagar துரைசாமி சாலையில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் பிரைவேட் லிமிடெடில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிமுக விழாவில் MMTC PAMP Pvt Ltd ன் நுகர்வோர் பிரிவின் தலைவர் திரு.ஷங்கர் நில் போரா மற்றும் துணைத் தலைவர் திரு. கவன் திப் குஜரால் முன்னிலையில் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் உரிமையாளர் Dr. யோ. சிவ அருள்துரை அவர்கள் இந்த விற்பனையை துவக்கி வைத்தார்.
சுவிஷ் கைவினைத்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் தரமாக இவை தயாரிக்கப்படுகிறது - அன்பு உள்ளங்களுக்கு அன்பான பரிசுகளாகவும், பாரம்பரியமிக்க டிசைன்களும், பொக்கிஷங்களாக சேகரிக்கப்பட வேண்டிய டிசைன்களும், திவ்யமான பக்தியூட்டும் டிசைன்களும் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தி.நகர் மற்றும் தாம்பரத்தில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட்ல் விற்பனைக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.