15 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அஜித் பட இயக்குனர்......
திரையுலகை பொருத்தவரை ஒரு நடிகர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அவரது நடிப்பு திறமை எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட அவரை இயக்கும் இயக்குனரும் மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் ஒரு இயக்குனர் அந்த நடிகரை படத்தில் சிறந்த ஹீரோவாக காட்டுகிறார். அதுமட்டுமின்றி படத்தின் கதையும் முக்கியமாகும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் தலயாக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் முக்கியமான படம் என்றால் சிட்டிசன் படம் தான். மாறுபட்ட கதைகளத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த படம் அஜித்தின் சினிமா வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். சிட்டிசன் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை அஜித்துக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் வழங்கிய இயக்குனர் வேறு யாருமல்ல சரவணன் சுப்பையா தான்.
இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகர் ஷியாம் மற்றும் சினேகா நடிப்பில் உருவான ஏபிசிடி என்ற படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா அதன் பின்னர் எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. தற்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
சரவணன் சுப்பையா இயக்கியுள்ள அந்த படத்திற்கு மீண்டும் என தலைப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் ஜேர்னரில் உருவாகியுள்ள இப்படத்தில் கதிரவன், சரவண சுப்பையா, அனைகா, சுப்பிரமணிய சிவா, யார் கண்ணன், துரை சுதாகர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.