தொக்கா மாட்னீங்க!. இப்படித்தான் நானும் சிக்கினேன்!. சித்தப்பு சரவணனிடம் சொன்ன ரஜினி.....

by சிவா |
saravanan
X

Actor saravanan: சேலத்திலிருந்து சினிமாவுக்கு நடிக்க வந்தவர் சரவணன், 2 ஆயிரம் ஆண்டில் முன்னணி நடிகராக மாறி சில ஹிட் படங்களை கொடுத்தார். தீவிர ரஜினி ரசிகரான இவர் சேலத்தில் ரஜினி ரசிகர் மன்ற பணியிலும் இருந்தவர். வைதேகி வந்தாச்சு, பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன், செவத்த பொண்ணு, தாய் மனசு என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

ஆனால், சில காரணங்களால் இவருக்கு மார்கெட் போனது. தடம் மாறி சொந்த வாழ்விலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு சினிமாவிலிருந்தே விலகினார். சில வருடங்களில் உடல் வெயிட் போட்டு குண்டாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பாலா இயக்கிய நந்தா படத்தில் சரவணனின் தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இதையும் படிங்க: ‘ரஜினி171’க்கு பக்கா ப்ளான் போட்ட லோகேஷ்! ஒருத்தன் உள்ள வர முடியாது – இவங்க இருக்கும் போது என்ன பயம்?

அதன்பின் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் இவரின் மொத்த வாழ்க்கையயும் மாற்றி போட்டது. இந்த படத்தில் சரவணனுக்கு சித்தப்பாவாக நடித்திருந்து அலப்பறை செய்திருந்தார். கார்த்தியோடு சேர்த்து ‘ஊரோரம் புளியமரம்’ பாடலில் செமையாக நடனமும் ஆடி அசத்தியிருப்பார்.

இப்படத்தில் கார்த்தி இவரை சித்தப்பு.. சித்தப்பு என அழைப்பார். எனவே, ரசிகர்களும் அவரை எங்கு பார்த்தாலும் சித்தப்பு என்றே அழைத்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல. திரையுலகை சிறந்த பலரும் சரவணனனை அப்படியே அழைத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது நடிகர் கவின் மற்றும் சாண்டி என பலரும் அவரை சித்தப்பு என்றே கூப்பிட்டனர். தற்போது அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது. தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மட்டும் அத செய்யலைனா ரஜினியின் நிலைமை? ரெட் கார்டு சம்பவத்தில் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

பருத்தி வீரன் படத்தை பார்த்த ரஜினி சரவணனிடம் ‘நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க.. பதினாறு வயதினிலே படத்திற்கு பின் என்னை எல்லோரும் ‘பரட்டை’ என்றுதான் கூப்பிட்டனர். அதை மாற்ற நான் படாத பாடுபட்டேன். 17 வருடங்கள் கழித்துதான் என்னை அப்படி கூப்பிடுவதை நிறுத்தினார். அதேபோல், ரசிகர்கள் இனிமேல் உங்களையும் ‘சித்தப்பு’ என்றுதான் கூப்பிடுவார்கள்’ என சொன்னாராம்.

இதை ஊடகம் ஒன்றில் சொன்ன சரவணன் ‘ரஜினி சார் சொன்னது போலவே இப்போதுவரை என்னை எல்லோரும் சித்தப்பு என்றுதான் கூப்பிடுகிறார்கள்’ என அவர் சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ வெற்றி நெல்சனை தூக்கி விடும்னு பார்த்தா துரத்தி விட்டுருச்சு! அப்போ அவ்ளோதானா?

Next Story