
Cinema News
கார்த்திக்கு ஜோடியாகும் அண்ணியார்…! நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கும் நாயகி..
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பருத்தி வீரன் படம் முதல் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை வித்தியாசமான தோற்றத்தில் நடித்து மக்களை திருப்தி படுத்தி வருகிறார்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் இவரின் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுகின்றன. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வம் படப்பிடிப்பை முடித்திருக்கும் கார்த்தி ஹூரோ பட இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே சிறுத்தை படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இவர் வயதான தோற்றத்தில் ஒரு ரோலில் நடிக்கிறார். நடிகை ராஷிகண்ணா மற்றும் ரரஜிஷா விஜயன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
வயதான தோற்றத்திற்கு ஜோடியாக சிம்ரனை அணுகியுள்ளனர். தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நடிக்க முடியவில்லை. ஆதலால் நடிகை லைலாவை ஃபிக்ஸ் செய்துள்ளனர் படக்குழுவினர். லைலா ஏற்கெனவே கார்த்தி அண்ணன் சூர்யாவுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அண்ணி நிலையிலிருக்கும் லைலா கார்த்திக்கு ஜோடியாக 18 வருடங்கள் கழித்து சினிமாவில் திரும்ப வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.