அந்த நடிகருடன் ஷூட்டிங்!.. எம்.ஜி.ஆருக்கே அல்வா கொடுத்த சரோஜாதேவி!.. நடந்தது இதுதான்!..
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கதாநாயகிகளில் சரோஜாதேவி முக்கியமானவர். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகை இவர். கன்னட படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சரோஜாதேவி. இவர் நடிக்க வந்த துவக்கத்திலேயே தனது நாடோடி மன்னன் படத்தில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் அன்பே வா, படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, காவல்காரன், பாசம், தர்மம் தலை காக்கும், பெரிய இடத்து பெண், பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், தெய்வத்தாய் உள்ளிட்ட பல படங்களிலும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் சரோஜா தேவி. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக இவர் இருந்தார்.
இதையும் படிங்க: கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..
அதேபோல், திரையில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மிகவும் ரசித்த ஜோடியாகவும் இருவரும் இருந்தனர். அதேநேரம், எம்.ஜி.ஆர் படம் மட்டுமில்லாமல் சிவாஜி உள்ளிட்ட பலரோடும் ஜோடியாக நடித்து வந்தார் சரோஜாதேவி. சிவாஜியுடன் பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், ஆலயமணி, பாகப்பிரிவினை, இருவர் உள்ளம், புதிய பறவை என பல படங்களை சொல்லலாம்.
பொதுவாக நடிகைகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருப்பார்கள். ஆனால், உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லிவிட்டு வேறு படத்திற்கு நடிக்க போய்விடுவார்கள். இது தெரியாமல் மொத்த யூனிட்டும் அவருக்காக காத்திருப்பார்கள். இதை பலமுறை சரோஜா தேவியும் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: இனிமே ரசிகர்களை ஏமாத்த முடியாது.. அரசியலுக்கு போறேன்!.. எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!…
எம்.ஜி.ஆருடன் ‘தெய்வத்தாய்’ படத்தில் அவர் நடித்து கொண்டிருந்தார். எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் வயிற்று வலி என சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு சரோஜா தேவி வரவில்லை. எம்.ஜி.ஆர் உள்ளிட்ட படக்குழு அவருக்காக படபிடிப்பு தளத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. அதன்பின் அவருக்கு வயிற்று வலியெல்லாம் இல்லை. பொய் சொல்லிவிட்டு புதிய பறவை படத்துக்காக ஊட்டியில் ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலுக்கு நடிக்க போய்விட்டார் என்பது தெரியவந்தது.
இதனால் எம்.ஜி.ஆர் கோபமடைந்தார். பல நாட்கள் சரோஜாதேவியிடம் சரியாக அவர் பேசவில்லை. ஆனாலும், படத்தின் இறுதிக்காட்சியில் அவரை அலேக்காக துக்கி அங்கும் இங்கும் வைக்கும்படி ஒரு காட்சி. சரோஜாதேவி மிகவும் ஒல்லியாக இருப்பதாக கூறி தினமும் மாலை பாசந்தி வரவழைத்து ‘இதை சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் வெயிட் போடு’ என சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.