எம்.ஜி.ஆரை முதன்முதலாக பார்த்த அந்த தருணம்!.. ஃபீலிங்ஸ் காட்டும் சரோஜாதேவி...
எம்.ஜி.ஆர் அவரின் ஆக்ஷன் படங்களுக்கு மட்டுமல்ல அவரின் நிறத்திற்கும் பெயர் போனவர். ரோஜாப்பூ கலரில் தகதகவெனு மின்னும் நிறத்தை உடையவர் அவர். அதனால்தான் அவருக்கு அத்தனை பெண் ரசிகைகள் இருந்தனர். அவரின் நிறத்திற்கு அவர் தினமும் பாலில் தங்கபஷ்பம் கலந்து சாப்பிடுவார் என்று கூட ஒரு வதந்தி உண்டு.
இதுபற்றி ஒருமுறை விளக்கம் சொன்ன எம்.ஜி.ஆர் ‘பல பேருக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நான் தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவதால்தான் நிறமாகவும், உடல் திடமாகவும் இருப்பதான நினைக்கிறார்கள். அதில் உண்மை கிடையாது. ஒரு குண்டூசி முனையில் தங்கத்தை தொட்டு பாலிலோ அல்லது நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள். அளவு அதிகமானால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். உடலை பாதுகாப்பது மனதை பொறுத்தது. நமக்கு வயதாகிவிட்டதே என நினைக்காமல் ‘நமக்கு என்ன வயதாகிவிட்டது’ என நினைத்தால் வயோதிகம் நம்மை நெருங்காது. மற்றவர்கள்தான் என் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். நான் அதுபற்றி நினைப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை’ என்று சொன்னார்.
இதுஒருபுறம் இருக்கட்டும். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் சரோஜாதேவி. அவர் முதன் முதலாக எம்.ஜி.ஆரை பார்த்தபோது எப்படி உணர்ந்தார் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ‘நான் ஒரு கன்னட படத்தில் துணை நடிகையாக நடித்து கொண்டிருந்தேன்.
அப்போது படப்பிடிப்பில் ஒரே பரபரப்பு. ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வந்தது போல மின்னும் ஒளியுடன் ஒருவர் நடந்துவந்தார். அவரை எல்லோரும் வணங்கினார்கள். நானும் வணங்கினேன். ‘இவர் யார்?’ என கேட்டபோது ‘இவர்தான் எம்.ஜி.ஆர்’ என கூறினார்கள். அவரின் அழகிலும், நிறத்திலும் மயங்கிப்போனேன். என்னை பார்த்த அவர் அவர் இயக்கிய நாடோடி மன்னன் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் படகோட்டி, அன்பே வா உள்ளிட்ட பல படங்களில் அவருடன் நடித்தேன். எம்.ஜி.ஆரின் தெய்வீக அழகு, அவரின் நிறம், இயற்கை அவருக்கு கொடுத்த வரப்பிரசாதம்’ என ஃபீலிங்கோடு பேசியுள்ளார்.