சம்பளம் கொடுக்காமல் கத்திய இயக்குனர்... சரோஜாதேவி தாயாரால் நடுத்தெருவிற்கு வந்த அவலம்...
படத்தின் தோல்வியால் நாயகி சரோஜாதேவி சம்பளத்தினை இல்லை என கத்திய இயக்குனரிடம், அவர் தாயார் சாபமிட்டார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது.
போலீஸ் அதிகாரி பைரப்பாவிற்கு நான்காவது மகளாக பிறந்தவர் ராதாதேவி கவுடா. காவல்துறை தந்தை என்பதால் கண்டிப்பாக இருந்திருப்பாரோ என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சரோஜா தேவிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர் அவர் தந்தை தான். பாடல் முதல் நடனம் வரை அவருக்கு முறையாக கற்றுக்கொடுத்தார். ஆனால், அவரது தாயார் மிக கண்டிப்புடன் வளர்த்து வந்தார்.
17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார். அப்போதைய காலங்களில், மற்ற சூப்பர்ஸ்டார் நடிகர்களை விட சரோஜாதேவிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்திற்கு அவர் அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை.
எஸ்.ஏ.நடராஜன் இயக்கி நடித்து உருவான படம் கோகிலவாணி. மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் வெளிவந்தது. இப்படத்தில் சரோஜா தேவியும் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியினை தழுவியது. இப்படத்திற்கு சரோஜா தேவிக்கு 1000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, ரூ.100 அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இருந்தது. படம் தோல்வியடைந்து எஸ்.ஏ. நடராஜன் கடனாளியாகிவிட்டதால் எஞ்சிய தொகையை அவரால் கொடுக்க முடியவில்லை.
அப்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சரோஜா தேவி குடும்பமும் சந்தித்திருந்தனர். கொஞ்சமாவது காசு கொடுங்கள். அவளுக்கு இரு பட வாய்ப்பு வர இருப்பது போல இருக்கிறது. வந்தால் கண்டிப்பாக இந்த காசினை கொடுத்து விடுவதாக கூறினார் சரோஜா தேவி தாயார். உடனே, எஸ்.ஏ. நடராஜனிடம் இந்த விவரத்தை தெரிவித்தனர்.
இதில் கடுப்பான நடராஜன் வெளிவந்து ஏன்மா அறிவில்ல, நாங்க ரெண்டு படத்துல நஷ்டமடைஞ்சு லட்சணக்கான பணத்தை இழந்துட்டு நிக்கிறோம். இப்ப வந்து சம்பளம் கேட்குற... எனக் கத்தினார். அத்துடன் நிறுத்தவில்லை. உன் பொண்ணால தான் என் படம் போச்சு என வார்த்தையினை விட்டார். இதில் கடுப்பான சரோஜா தேவியின் தாய், நடிச்சவங்க வயித்துல அடிச்சிட்டீல நிச்சயமா இனிமேல் நீ படமே எடுக்க முடியாது என மண்ணை வாறி தூற்றிவிட்டுச் சென்றார். அதன்பின்னர், அவரால் தன் கடனில் இருந்து மீளவே முடியாமல் மொத்தமாக முடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.