50,60 களில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவரது வாழ்வில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்த சம்பவம் எனில் அது எம்.ஆர்.ராதா அவரை சுட்டதுதான். ‘பெற்றால்தான் பிள்ளையா’ பட தயாரிப்பாளருக்கு ஒரு லட்சம் கடன் கொடுத்திருந்தார் எம்.ஆர்.ராதா. ஆனால், தயாரிப்பாளரால் அதை திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த பஞ்சாயத்து எம்.ஜி.ஆரிடம் போக அப்போது நடந்த பிரச்சனையில்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டார்.
1966ம் வருடம் வெளியான ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. இந்த படம் வெளியான சமயத்தில்தான் எம்.ஆர்.ரதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நடந்தது. இந்த படத்திற்கு பின் வெளியான திரைப்படம் அரச கட்டளை. இந்த படத்திலும் சரோஜா தேவிதான் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டிருந்தது.
அதாவது, எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி எந்த படத்திலும் இணைந்து நடிக்கவே இல்லை. ‘பெற்றால்தான் பிள்ளையா’ படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து வெளியான படம் அடிமைப்பெண். இப்படத்தில் சரோஜாதேவியும், கே.ஆர்.விஜயாவும் இணைந்து நடிப்பதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவை அந்த படத்தில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த சரோஜாதேவி எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின் ஏன் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது இப்போது வரை புதிராகவே இருக்கிறது.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…