Cinema History
மரியாதை கொடுக்காத சரோஜாதேவி!.. ஆனாலும் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்ட எம்..ஜி.ஆர்…
எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் சரோஜாதேவி. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். ஆனாலும், தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி உச்சம் தொட்டவர். 60களில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆருக்கு அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர்தான்.
கன்னடம் தனது தாய்மொழி என்றாலும் தமிழை பேச கற்றுக்கொண்டு நடித்தார். இவரின் தமிழ் உச்சரிப்பே வித்தியாசமாக இருக்கும். ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் அதையும் ரசித்தார்கள். எம்.ஜி.ஆருடன் அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை, தர்மம் தலை காக்கும், பெரிய இடத்து பெண், நான் ஆணையிட்டால், பாசம், படகோட்டி, தெய்வத்தாய் என பல படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: அவர் வந்தாத்தான் கல்யாணம்!.. தீவிர ரசிகன் செய்த வேலை!.. எம்.ஜி.ஆர் என்ன பண்ணார் பாருங்க!..
எம்.ஜி.ஆர் ஹீரோவாக வளர்ந்தபோது சில கதாநாயகிகள் அவருடன் நடிக்க முரண்டு பிடித்தனர். இதனால் படப்பிடிப்பில் சில அவமானங்களையும் அவர் சந்தித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி, தயாரித்து நடித்த திரைப்படம் நாடோடி மன்னன். கடன் வாங்கி அதிக பொருட்செலவில் இப்படத்தை எடுத்தார்.
இப்படத்தில் நடித்த பானுமதி படம் 80 சதவீதம் முடிந்தநிலையில் எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டுக்கொண்டு படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பின்னரே அந்த வேடத்தில் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை முதன் முதலில் எங்கே பார்த்தார் என்பது பற்றி பார்ப்போம்.
கண்ணதாசனின் அண்ணன் சீனிவாசன் தயாரிப்பில் உருவான ஒரு கன்னட படத்தில் நடித்து கொண்டிருந்தார் சரோஜாதேவி. சீனிவாசனை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆர். அப்போது எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்றனர். ஆனால், சரோஜாதேவி எந்த மரியாதையும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…
அப்போது ‘யார் இந்த பெண்?’ என எம்.ஜி.ஆர் விசாரிக்க ‘இவர் பெயர் சரோஜாதேவி. இந்த படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்’ என சொல்லி இருக்கிறார்கள். ஒருபக்கம், ‘யார் இவர்?.. இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள்?’ என சரோஜாதேவி கேட்க ‘இவர்தாம்மா எம்.ஜிஆர்’ என அருகிலிருந்தவர்கள் சொல்ல பதறிப்போனார் சரோஜாதேவி. ஏனெனில், அப்போதுதான் அவர் எம்.ஜி.ஆரை முதன் முதலாக நேரில் பார்த்தார்.
சீனிவாசனை சந்தித்துவிட்டு திரும்பும்போது சரோஜாதேவியிடம் நின்று சில வார்த்தைகள் கன்னடத்தில் பேசிவிட்டு போய்விட்டார் எம்.ஜி.ஆர். அதன்பின் திருடாதே, நாடோடி மன்னன் ஆகிய படங்களில் சரோஜா தேவியை நடிக்க வைத்தார்.