திரை உலகில் முதன் முதலில் கன்னட சினிமா உலகின் மூலம் அறிமுகமானார் நடிகை சரோஜாதேவி. தமிழில் எம்ஜிஆர் சிவாஜி தெலுங்கில் என்டி ராமராவ் கன்னடத்தில் ராஜ்குமார் என அனைத்து மொழி சினிமாக்களிலும் இருக்கும் சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த பெருமை பெற்ற நடிகையாக வலம் வந்தவர் சரோஜாதேவி.
தமிழில் கோலோச்சி இருந்த பானுமதி, பத்மினி, டி ஆர் ராஜகுமாரி அவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு மிகப்பெரிய ஆளுமையாக வந்தவர் சரோஜாதேவி. இவருடைய அந்த கொஞ்சம் பேசும் தமிழே அனைவரையும் ஈர்த்தது. தனக்காக யாரையும் டப்பிங் பேச அனுமதிக்க மாட்டார். எல்லா மொழிகளிலும் அவருடைய சொந்த குரலிலேயே வசனங்களை பேசி நடித்தார் சரோஜாதேவி.
வருடத்திற்கு 30 படங்கள் வீதம் படு பிஸியாக நடித்து வந்தார்.. இவருடைய கால்சீட்டிற்காக எம்ஜிஆர் முதல் சிவாஜி, ஜெமினி கணேசன் என அனைவரும் காத்திருந்த காலங்கள் ஏராளம். ஆனால் அவர்கள் யாருமே சரோஜாதேவி மீது கோபம் கொண்டதே இல்லையாம். ஏனெனில் அவர் பிசியாக நடித்து வந்ததை அனைவரும் பெருமையாகத்தான் நினைத்தார்களாம்.
இன்றைய கால சினிமாவைப் பற்றி சரோஜாதேவி ஒரு பேட்டியின் போது தெரிவித்திருக்கிறார். அதாவது இந்த கால சினிமாக்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் படம் டிவியில் போட்டாலும் நான் பார்க்க மாட்டேன் என்றும் கூறினார்.
புதிய படங்கள் எதையும் நான் பார்க்க மாட்டேன் என்றும் பழைய படங்கள் போட்டால் மட்டுமே போட்டியில் பார்ப்பேன் என்றும் கூறினார். மேலும் கடைசியாக பார்த்த படம் பொன்னியின் செல்வன் என்றும் கூறியிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டிய சரோஜாதேவி கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தை மட்டும் பார்த்தேன் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் எந்த படங்களையும் பார்க்க மாட்டேன் என்று கூறிய சரோஜாதேவி கமல் படத்தை மட்டும் பார்ப்பாராம் .ஏனெனில் கமலை சிறு வயதில் இருந்தே தான் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் ஒரு நல்ல நடிகர் என்பதையும் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க : சரத்பாபுவின் உடல்நிலை !..யார்கிட்டயும் சொல்லவில்லை.. இப்படியும் ஒரு மனிதரா?..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…