Categories: Cinema History Cinema News latest news

பல நடிகர்கள் காதல் தூண்டில் போட்டும் சிக்காத சரோஜா தேவி.. இதெற்கெல்லாம் காரணம் அவர்தானாம்!..

கன்னட சினிமாவின் மூலம் முதன்முதலில் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார் நடிகை சரோஜாதேவி. தமிழ் ,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றவர். கன்னடத்துப் பைங்கிளி என்றும் அபிநய சரஸ்வதி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.

இந்திய சினிமாவிலேயே பெரும் சாதனை படைத்த நடிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் சரோஜாதேவி. தமிழில் முதன் முதலில் நாடோடி மன்னன் என்ற படத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

எம்ஜிஆர் ,சிவாஜி, திலீப் குமார் ,என்.டி ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் போன்ற பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த பெருமைக்குரியவர் சரோஜாதேவி. மேலும் எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் நடித்து எம்ஜிஆர்க்கு சரியான ஆன் ஸ்கிரீன் ஜோடியாக திகழ்ந்தவர் சரோஜாதேவி.

அதேபோல சிவாஜியுடன் 22 படங்களில் ஜோடியாக நடித்தார். ஜெமினியுடன் ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமாவில் மூவேந்தர்களாக திகழும் எம்ஜிஆர், சிவாஜி ,ஜெமினி ஆகியோர்களின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களாக அமைந்த அனைத்து படங்களிலும் சரோஜாதேவியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் ஒரு ஃபேஷன் ஐகானாக திகழ்ந்தார் சரோஜாதேவி. தன்னுடைய உடை அலங்காரம், சிகை அலங்காரம், நகை அலங்காரம் என அனைத்தையும் அவரே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அலங்கரித்துக் கொள்வாராம். மேலும் கவர்ச்சியில் நாட்டம் கொள்ளாதவர்.

நடிகைகளில் மிகவும் அழகானவர் சரோஜாதேவி. அதனாலேயே அவரை ஒரு சில நடிகர்கள் காதல் அப்ரோச் பண்ணார்களாம். இதைப் பற்றி குறிப்பிட்டு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சரோஜாதேவியிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த சரோஜாதேவி, சினிமாவில் நுழையும் போதே அவரது அம்மா மிகவும் கண்டிப்புடன் கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க : அந்த விஷயத்துல ரஜினிகே டஃப் கொடுப்பாங்க..- மீனா பற்றி பிரபுதேவா சொன்ன சீக்ரெட்…

அதாவது இந்த மாதிரி சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதில் எதிலுமே நீ மாட்டி விடக்கூடாது என்றும் அதையும் மீறி காதலிக்கிறேன் என்று வந்தால் நாங்கள் கண்டிப்பாக திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும் அதனால் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெரும் அவமானம் ஏற்படும் என்றும் ஆரம்பத்திலேயே மிகவும் காராக சொல்லிவிட்டாராம். எந்த சூழ்நிலையிலும் தன் தாயின் பேச்சை மீறாத சரோஜா தேவி இந்த விஷயத்திலும் அவரின் பேச்சை தட்டாதவராகவே இருந்திருக்கிறார்.

Published by
Rohini