கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகை சரோஜாதேவி . தமிழ் சினிமாவில் முதன் முதலில் நாடோடி மன்னன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சரோஜாதேவி கன்னட உலகில் தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவர் கொஞ்சிக் கொஞ்சி பேசும் அந்த அழகே அனைவரையும் ரசிக்க வைக்கும்.

தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்த சரோஜாதேவி எந்த மொழிகளிலும் தனக்கு வேறொருவரை டப்பிங் பேசுவதை விரும்ப மாட்டாராம் .அவருடைய சொந்த குரலிலேயே எல்லா படங்களிலும் நடித்து இருக்கிறாராம். அதற்காகவே அனைத்து மொழிகளையும் கற்று அறிந்திருக்கிறார்.
மனதில் பட்டதை உள்ளது உள்ளபடியே பேசும் சரோஜாதேவி தன் சினிமா அனுபவங்களை ஒரு பேட்டியின்போது பகிர்ந்திருக்கிறார். எம்ஜிஆர் உடன் 26 படங்கள் சிவாஜி உடன் 22 படங்கள் என முக்கிய ஆளுமைகளாக இருந்த அவர்களுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் சரோஜாதேவி.

அதுமட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் நடித்த பெருமை பெற்றவர். எந்த நேரத்திலும் தன்னுடைய அம்மா பேச்சை மீறாதவராக இருந்தாராம் சரோஜாதேவி. அதனாலையே இன்றுவரை அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கூட சரோஜாதேவிக்கு தெரியாதாம் .எல்லாவற்றையும் அவர் அம்மாதான் பார்த்துக் கொள்வாராம்.
எந்த ஒரு நடிகரின் காதல் வலையிலும் வீழாதவராக இருந்திருக்கிறார் சரோஜாதேவி. அதற்கும் அவர் அம்மாதான் காரணம் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். யாரிடமும் பகைமை பாராட்ட கூடாது என்ற கொள்கையை மனதில் பதிய வைத்தவர் ஆக இன்று வரை வாழ்ந்து வருகிறார் சரோஜாதேவி.

தன்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அந்த பேட்டியில் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார். பெரும்பாலும் அவருக்கு சண்டைகள் போடுவது பிடிக்காதாம். அதனாலயே எம்ஜிஆர் படங்களில் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் போது அவர் இருக்க மாட்டாராம். படப்பிடிப்பில் இருக்கிறவர்களே சரோஜாதேவியை வெளியே அனுப்பி விடுவார்களாம் இல்லையென்றால் அவருடைய காட்சிகளை மட்டும் முதலில் படமாக்கி விட்டு அவரை அனுப்பி விடுவார்களாம்.
இதையும் படிங்க : டிவிட்டரை விட்டு போக ரஜினிதான் காரணமா?.. நெருக்கடியில் சிக்கிய சிவகார்த்திகேயன்!..
