சர்வம் மாயா திரைப்படம் 2025-ம் ஆண்டு இறுதியில் வெளியாகி, தற்போது 2026-ன் தொடக்கத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ள ஒரு மலையாளத் திரைப்படமாகும். வழக்கமாக பேய் படமாக இல்லாமல் ஒரு பீல் குட்டுடன் காமெடி கலந்த படமாக வெளிவந்தது. நிவின்பாலி , ரியா ஷிபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. அகில் சத்யன் இயக்கியிருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படத்தின் நாயகியின் பெயரான டெலுலு சமூகவலைதளங்களில் கொண்டாடப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நிவின்பாலிக்கு கம்பேக் கொடுத்த இப்படம் மொத்தம் ரூ 15 கோடியில் தயாரான இப்படம் கிட்டத்தட்ட ரூ.150 கோடி வரை வசூல் ஆனதாக கூறப்படுகிறது.





