கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா அந்த பழக்கத்தில் இருந்த சசிகுமார்!.. அந்த படத்தின் கதை அப்படி!..பாவம் தான்!..

by Rohini |
sasi_main_cine
X

sasikumar

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நடிகரும் இயக்குனருமான சசிகுமார். அந்த படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். அந்த ஒரு படத்தின் மகத்தான வெற்றி அவரை ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் பட்டியலில் உட்கார வைத்தது.

sasi1_cine

sasikumar

அடுத்ததாக ஈசன் என்ற படத்தை இயக்கினார். அது சுப்ரமணியபுரம் அளவில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து அவர் நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கினார். தொடர்ந்து சுந்தரபாண்டி, தார தப்பட்டை, பலே வெள்ளையத்தேவா, எம்ஜிஆர் மகன், உடன் பிறப்பே போன்றப் படங்களில் நடித்தார்.

மேலும் ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். சமீபத்தில் வெளியான காரி, நான் மிருகமாய் மாற போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் இரா. சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

sasi2_cine

sasikumar

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று உதய நிதி ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்துக்களை கூறினார். அந்த போஸ்டரில் சசிகுமார் வாய் நிறைய வெற்றிலை பாக்கு கரையுடன் பார்க்கவே பயங்கரமாக காட்சியளித்திருக்கிறார். இதற்காகவே சசிகுமார் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாகவே வெற்றிலை பாக்கு போட்டு பழக்கப்படுத்திக் கொண்டாராம்.

இதையும் படிங்க : 37 வயதில் தனது காதலனை அறிமுகம் செய்த ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை!.. இவர் தானா அது?..

மேலும் இந்த நந்தன் படம் புதுக்கோட்டையிலுள்ள நிலக்கிழாருக்கும் கூலித்தொழிலாளிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் பற்றிய கதையாகும். எதையும் துணிந்து ஏற்று நடிக்கும் சசிகுமார் இந்த படத்திற்கு அதிகமாகவே மெனக்கிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

sasi3_cine

sasikumar

Next Story