Connect with us

Cinema History

சமுத்திரக்கனி எப்படி எனக்கு நெருக்கமானார் தெரியுமா?… நெகிழும் சசிக்குமார்….

சசிக்குமார் தமிழ்த்திரைப்படத்தின் மறக்கமுடியாத நட்சத்திரம். இவரை செல்லமாக சசி என்று அழைப்பர். செப்டம்பர் 28, 1974ல் பிறந்தார். தந்தை மகாலிங்கம். தாயார் பத்மாவதி. இவர் கொடைக்கானலில் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பிபிஏ படித்தார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவர்.

சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன், நாடோடிகள், தாரை தப்பட்டை, கிடாரி ஆகிய படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன. பிலிம்பேர் விருது, தேசிய விருது, விஜய் விருதுகளைப் பெற்றுள்ளார். தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தைப் பகிர்கிறார்.

sasikumar

பேஸ்கட் பால் பள்ளிப்பருவத்தில் விளையாடி உள்ளார். கபாடி விளையாட்டில் ஆர்வமிக்கவர். 7ம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு டைரக்டராக வேண்டும் என்று எண்ணம் தோன்றி விட்டது. எங்க ஸ்கூல்ல சனி, ஞாயிறு படங்கள் போடுவாங்க.

சனிக்கிழமை இங்கிலீஷ் படம், ஞாயிறு தமிழ்ப்படம் நடிப்பாங்க. இவங்கள எல்லாம் நடிக்க வைக்கிறது யாருன்னு கேட்பேன். டைரக்டர்னு சொல்வாங்க. ஸ்கூல்ல டீச்சர் எல்லா பிள்ளைகளையும் நடிக்க வைப்பாங்க. அவங்க தான் எல்லாரையும் இயக்குறதனால டைரக்டர் வேலை பிடிச்சது.

20வது வயதில் பாலா சாரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக இணைந்தார். என்னுடைய சித்தப்பா கந்தசாமி தான் சேது படத்தின் தயாரிப்பாளர். அவர் இந்த மாதிரி படம் பண்ணப்போறேன்னு சொன்ன உடனே எனக்கு ஒரு இன்ட்ரஸ்ட் வந்தது.

உடனே நானும் ஒர்க் பண்றேன்னு சொன்னேன். அசிஸ்டண்டண்ட் டைரக்டர், புரொடக்ஷன் வேலைகளையும் பார்த்தேன். அது எனக்கு சப்போர்ட்டா இருந்தது. செட்ல நிறைய விஷயங்கள் கிரியேட்டாகணும்.

மொட்டைகள் அடிச்சி 100 பேர் நின்னது தமிழ்சினிமாவில் இந்த மாதிரி படங்கள் வந்ததில்ல என்று தோன்றியது. கிளைமாக்ஸ் சீனில் விக்ரம் சார் அழுதுக்கிட்டு வரும்போது எங்களுக்கே பீல் ஆனது. எல்லாரும் இந்தப்படத்தில நம்பிக்கை வச்சித் தான் உழைச்சாங்க. இந்தப்படம் விக்ரம் சாருக்கும் ரொம்ப நம்பிக்கை. அசிஸ்டண்ட் டைரக்டர்ல இருந்து புரொடக்ஷன் பாய் வரை எல்லாருக்குமே இந்தப்படத்தின் மேல் நம்பிக்கை வந்தது.

sethu vikram

பிரிவியூ மட்டும் 100 ஷோ போட்டுருப்போம். கிருஷ்ணவேணி தியேட்டர்ல நான், அமீர் சார், விக்ரம் சார், பாலா சார் எல்லாருமே பார்த்தோம். வெளியில பர்ஸ்ட் ஷோ கம்மியா வருது. அடுத்த ஷோ கூட்டம் வந்தது. விக்ரம் சார் போய் ஆபரேட்டர்ல தியேட்டர்ல ஆடியன்ஷோட எக்ஸ்பீரியன்ஸ் பத்தி பேசிட்டு வந்தாரு. அப்போ தியேட்டர் கம்மியாத்தான் கிடைச்சது. படையப்பா படம் அப்போ வந்தது.

நானும் அமீர் சாரும் போனோம். அப்போ விக்ரம் சார் நானும் வர்றேன்னார். அவரு கேப் போட்டு வந்தார். உதயம் தியேட்டர்க்கு போனோம்.
அப்போ நாங்க உதயம் தியேட்டர் வாசல்ல நின்னு கிட்டு இருக்கோம். ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் பிரிமியர் ஷோ பார்த்துட்டு ஒவ்வொருத்தரா வாராங்க. எல்லா ஆர்ட்டிஸ்ட்டும் கார்ல அப்படியே போயிட்டே இருப்பாங்க. விக்ரம் சாருக்கு ஒரு பீல் இருக்கும்ல. அப்போ அமீர் சார் சொன்னாரு. கவலைப்படாதீங்க.

சேது படம் வந்த பிறகு நீங்க அடுத்த வருஷம் அங்க இருந்து வருவீங்கன்னார். சேது வந்த பிறகு அதுக்கு அடுத்த வருஷம் அவரு அங்க இருந்து வந்தாரு. நாங்க ரெண்டு பேரும் நின்னுக்கிட்டு இருந்தோம். அப்புறம் மூணு பேருமே அப்படி வந்துட்டோம். இதை நினைச்சிப்பார்க்கும்போது நல்ல ஒரு உணர்ச்சிகரமான விஷயமாத் தெரியுது.

மௌனம் பேசியதே படத்தில் அமீர் சாரோட அசிஸ்டண்ட் டைரக்டரோட ஒர்க் பண்ணுணேன். அந்தப் படத்தில் உள்ள கௌதம் கேரக்டர் அமீர் சாரோட கேரக்டர் தான். கோபத்தில உர்ருன்னு இருக்கறது அவரோட கேரக்டர் தான். ஏன் இவரு சிரிச்சாத்தான் என்ன…சிரிச்சிட்டாலும்…என நாங்களே பார்ப்போம். நந்தா படத்தில சூர்யா சாருக்கும், அமீர் சாருக்கும் நல்ல நட்பு இருந்தது.

கௌதம் மேனன் சார் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சின்ன கேரக்டரில் தனுஷ்க்கு அண்ணனாக நடிக்கும் கேரக்டரில் பண்ணுனேன். ஒர்க் பண்ணும்போது அவ்ளோ ஈசியா இருந்தது. ரொம்ப கூல்லா நைஸா இருந்தது. மகேந்திரன் சார் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில அப்பாவா நடிச்சாரு. இதுதான் அவரோட கடைசி படம். அவரை அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருந்தாங்க. ரொம்ப கலக்கமா இருந்தது. ஏன்டா இங்க வந்தோம்னு இருந்துச்சு. ரொம்ப மிஸ் பண்றோம்.

என்னென்ன பிரச்சனைகள் அவரு படம் ஆரம்பிக்கும்போது வந்தது? எதனால இந்தப்படம் பண்ணுனீங்க..ஏன் இப்படி இருந்தது என எல்லா விஷயத்தையும் அவருக்கிட்ட ஓபனா பேசலாம். ஏன்னா நாங்க ஒரு ஸ்டூடண்ட். நடிக்கறதுலயும் இப்படி நடிக்கணும். ஏன்னா அவரு ஒரு டைரக்டருங்கறதால கரெக்டா நடிக்கணும்ங்கற கானசப்ட் அவருக்கிட்ட இருந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

subramaniyapuram

சமுத்திரக்கனி பருத்தி வீரன்ல கோ டைரக்டரா இருந்தாரு. அப்போ சுப்ரமணியபுரம் படத்தில வர்ற கனகவேல் கேரக்டருக்காக தலைமுடியை நிறைய வளர்த்துக்கிட்டா நல்லா இருக்கும்னு சொல்லிட்டேன். அது 80ஸ்ல நடக்கற கதை. ஏன்டா முடி நிறைய வளர்ந்துருச்சுடா. ஒய்ப் திட்டுதுடா…இவ்ளோ முடிய வச்சிக்கிட்டு…என்ன…என்னங்கறாங்க.

ஆமா…ஐயோ வளர்க்கச் சொன்னமே…வாங்க…அப்புறம் அவருக்கு ஒரு ஷர்ட் போட்டுப் பார்த்தோம். என்னடா பீரியட் பிலிமாடான்னாரு. ஆமான்னேன். அவருக்கு கதை சொல்லல…ஆனா…நம்பி வந்தாரு…அங்க தான் எங்களுக்கு நட்பு ஏற்பட்டுச்சு. ஏன்னா அவரு ரெண்டு படம் பண்ணிருக்காரு. இது என்னோட முதல் படம். நம்பி அக்சப்ட் பண்ணி எந்த தொந்தரவும் தராம நடிச்சாரு. அப்போ தான் அவரு நாடோடிகள் கதையும் சொன்னாரு.

ஜெய், சுவாதிரெட்டி ரெண்டுபேரோட நடிப்பும் பிரமாதமாக இருந்துச்சு. கடைசி வரை அவங்கக்கிட்ட முழு கதையும் சொல்லாம நடிக்க வச்சேன். படத்தைப் பார்த்துட்டு எல்லாரும் பாராட்டுனாங்க என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சசிக்குமார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top