சசிக்குமார் - விஜய் சேதுபதியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இயக்குனர்!.. செம அப்டேட்!..

தமிழ் சினிமாவில் ஓரிரு காட்சிகளில் நடித்து தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹிரோவாக நடிக்க துவங்கி பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. மற்ற ஹீரோக்களை போல ஹீரோயிசம் காட்டாமல் சாதாரண கதைகளில் இயல்பாக நடிப்பதே இவரின் ஸ்டைல்
அதனால்தான் விஜய் சேதுபதியை எல்லோருக்கும் பிடித்தது. நாலு ஃபைட், நாலு டூயட் என்கிற ஃபார்முலாவுக்குள் சிக்காமல் வித்தியாசமான கதைகளை வைத்திருக்கும் உதவி இயக்குனர்களை அழைத்து அவர்களை இயக்குனராக மாற்றினார். அதனால்தான் உதவி இயக்குனர்கள் விஜய் சேதுபதியை தங்களை காக்க வந்த கடவுள் போல பார்த்தனர்.
ஒருகட்டத்தில் வில்லன் வேடங்களிலும் நடிக்க துவங்கினார் விஜய் சேதுபதி. அப்படி அவர் நடித்து வெளியான மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, இப்போது ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார். இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் சுப்பிரமணியபுரம் படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் சசிக்குமார். மதுரையை சேர்ந்த இவர் பெரும்பாலும் அந்த ஊரை மையமாக கொண்ட கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.
இவரின் நடிப்பில் வெளிவந்த சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி வில்லானாக சில காட்சிகளில் வருவார். அப்போது அவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களிலும் நடித்து கொண்டிருந்தார். எனவே, படப்பிடிப்பில் அவரை மிகவும் மரியாதையாக நடத்த சொன்னார் சசிக்குமார்.
தற்போது அவர்கள் இருவரும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இந்த படத்தை கொடி, பட்டாஸ், கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கவுள்ளார். விரைவில் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது. சசிக்குமார் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ள இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றே நம்பலாம்.