பாலா அமீர் சண்டையில் சிக்கிய சசி.. – ரெண்டு பேரையும் சமாளிக்க இதுதான் வழி!..
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. அவரது தனிப்பட்ட திறன் காரணமாகவே பாலா படங்கள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பாலா இயக்கிய நான் கடவுள், பரதேசி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.
இயக்குனர் பாலா இயக்கி 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சேது. சேது திரைப்படம் பாலாவிற்கு மட்டுமின்றி விக்ரமிற்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த காலக்கட்டத்தில் இயக்குனர் சசி மற்றும் அமீர் இருவரும் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தனர்.
இருவரிடமும் நட்பு:
பாலாவும், அமீரும் நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால் காலங்கள் செல்ல செல்ல இவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருவருமே பிரிந்துவிட்டனர். ஆனால் சேது திரைப்படம் முதலே இருவரிடமும் நட்பில் இருந்து வந்தார் சசிக்குமார்.
அதிகப்பட்சம் சசிக்குமார் அமீருடன்தான் சுற்றிக்கொண்டிருப்பார். ஒரு திருமணத்திற்கு அமீரும் சசியும் வந்திருந்தனர். அப்போது அதே திருமணத்திற்கு இயக்குனர் பாலாவும் வந்திருந்தார். அதை பார்த்த அமீர் அங்க பாரு பாலா தனியா வந்திருக்கான். நீ போய் அவன் கூட நில்லு” என கூறி அனுப்பி வைத்துள்ளார்.
சசியும் பாலாவிடம் சென்றுள்ளார். சசியை பார்த்த பாலா “என்னடா அமீரும் வந்திருக்கானா?” என கேட்டுள்ளார். இப்படி இவர்கள் இருவரையும் சமாளிப்பதற்காக நடுநிலையாக நின்றுள்ளார் நடிகர் சசி.
இப்போதும் கூட பாலாவும் அமீரும் விலகியே இருக்கின்றனர். ஆனால் சசிக்குமார் மட்டும் இருவரிடமுமே நண்பராக இருந்து வருகிறார். இப்படி நடுநிலையாக இருப்பதே அதற்கு காரணம் என சசிக்குமார் கூறியுள்ளார்.