குக் வித் கோமாளி புகழ் குழந்தை இப்போ யாரு கையில இருக்கு பாருங்க!.. அந்த படத்துல கிடைச்ச நட்பு அப்படி!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் சினிமாவிலும் காமெடியனாகவும் தற்போது ஹீரோவாகவும் வளம் வரும் நிலையில் ஏகப்பட்ட பிரபலங்களில் ஃபேவரைட்டாக மாறியுள்ளார்.
நிஜமான புலியுடன் மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் நடித்துள்ள புகழ் பென்ஸி ரியா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்தாண்டு ரிதன்யா எனும் மகள் பிறந்தார்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்குப் பிறகும் கன்ட்ரோல் இல்லாமல் திரியும் அசோக் செல்வன் மனைவி!.. கணவரை பார்த்தீங்களா!..
மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அயோத்தி திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டு மழையில் சிறந்த படமாகவும் தேர்வானது. அந்த படத்தில் சசிகுமாருடன் காமெடி கதாபாத்திரத்தில் புகழ் நடித்திருப்பார். காமெடியனையும் தாண்டி ஒரு நல்ல நண்பனாகவே புகழ் அயோத்தி படத்தில் நடித்து அசத்தி இருப்பார்.
அந்த நட்பு குடும்ப நட்பாக மாறிய நிலையில், புகழ் வீட்டுக்கு வருகை தந்து சசிகுமார் புகழின் குட்டி தேவதை ரிதன்யாவை தூக்கி கொஞ்சம் புகைப்படத்தை புகழ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கண் திருஷ்டி பட்டுவிடக் கூடாது என்பதற்காக தனது மகளின் முகத்தை மட்டும் மறைத்தபடி அந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் புகழ்.
இதையும் படிங்க: அரசியலை பற்றி பேசவே பயந்த ரஜினி!.. எழுதி கொடுத்து தைரியம் கொடுத்த ஏவிஎம் சரவணன்!..
சிக்ஸர் படத்தின் மூலம் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு கடந்த 2019ல் அறிமுகமான புகழ் தொடர்ந்து அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, விஜய்சேதுபதியின் டிஎஸ்பி, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், கருங்காப்பியம், காசேதான் கடவுளடா என பல படங்களில் நடித்து வந்த புகழ் அதற்குள் ஹீரோவாக மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் நடித்துள்ளார்.