சசிகுமார் கையிலெடுக்கும் ‘குற்றம்பரம்பரை’ நாவல்!.. நடிக்கப் போறது யாருனு தெரியுமா?.. அட கேப்டன் மகன் இல்லைங்க..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நாவலை அடிப்படையாக கொண்டு பல படங்கள் தயாராகி கொண்டு வருகின்றன. மேலும் ரசிகர்கள் மத்தியிலும் அந்த மாதிரியான படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஏற்கெனவே ‘குற்றப்பரம்பரை’ நாவலை தழுவி இயக்குனர் சசிகுமார் வெப் சீரிஸ் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
நாவலிலே குற்றப்பரம்பரை நாவல் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை எழுதியது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வேல. ராமமூர்த்தி தான். இந்த நாவலை படமாக்க ஏற்கெனவே பாரதிராஜாவுக்கும் பாலாவுக்கு ஒரு போர்க்களமே உருவானது.
குற்றப்பரம்பரை நாலவை படமாக்க தனக்குத் தான் உரிமை உள்ளது என பாரதிராஜா ஒரு பக்கம் செய்தியாளர்களிடம் கூறினார். ஒரு பக்கம் தனக்கு மட்டுமே உரிமை உள்ளதாக பாலா கூறிவந்தார். இப்படியே பேச்சுவார்த்தை எழுந்த நிலையில் திடீரென சசிகுமார் அந்த நாவலை வெப் சீரிஸாக எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.
அதுவும் இப்போது சசிகுமார் ஃபுல் ஃபார்மில் இருப்பதால் மீண்டும் அந்த குதூகலத்துடன் டைரக்ஷனை கையில் எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் சசிகுமாரின் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வெற்றிக்களிப்பில் குற்றப்பரம்பரை நாவலையும் கையில் எடுத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஏற்கெனவே இந்த வெப் சீரிஸில் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது வெளியான அறிவிப்பில் பாலிவுட்டில் பட்டையை கிளப்பும் இயக்குனரும் நடிகருமான அனுரக் கஷ்யப் நடிப்பதாக தெரிகிறது.
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் போலீஸாக நடித்தவர் தான் அனுரக் கஷ்யப். அவர் தான் அந்த வெப் சீரிஸில் நடிக்கப் போகிறார் என்று கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க : ட்யூன் கேட்டு வந்த இயக்குனரை அவமானப்படுத்திய இளையராஜா!.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்..