
Cinema News
நண்பன் புகழ் நடிகரால் மொத்த படமே டிராப்…! இயக்குனரின் முடிவால் இழந்ததை தேடி அலையும் நடிகர்..
தமிழ் சினிமாவில் நண்பனுக்கு ஒன்னுனா உயிரயே கொடுக்கனும்னு அடிக்கடி தன் படத்தின் மூலம் தெரியப்படுத்துபவர் நடிகர் சசிகுமார். இயக்குனராக அறிமுகமாகி பின் தானே இயக்கி அந்த படத்தில் நடிக்கவும் ஆரம்பித்தார். இவரின் எல்லா படங்களிலும் செண்டிமெண்ட் அதையும் தாண்டி நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.
கமெர்ஷியலான படங்களிலே நடித்து வந்தவர் முதன் முதலில் ரஜினியுடன் ஒரு ஆக்ஷன் படமான பேட்ட படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவரை இன்னும் பல படங்களில் எதிர்ப்பார்க்கலாம் என எண்ணிய போது போதிய பட வாய்ப்புகள் வரவில்லை.
இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் படமான ஐயப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை பாய்ஸ் பட புகழ் கதிரேசன் வாங்கியிருந்தார். இந்த படம் ஒரு போலிஸ்க்கும் கைதிக்கும் இடையே நடக்கும் மோதல் குறித்த படமாகும். இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகர் சசிகுமாரை கமிட் பண்ணியிருந்தார்.
ஆனால் இப்ப இருக்குற நிலைமைக்கு சசிகுமாரின் மார்க்கெட் சரிந்துள்ளதால் அவரை வைத்து படம் பண்ணுவது ரிஸ்க் என நினைத்து விட்டார். அதனால் தான் அந்த படத்தை இப்ப எடுக்க வேண்டாம் என ஓரங்கட்டி வைத்துள்ளார். அவர் பழைய நிலைமைக்கு வந்ததும் அந்த படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளார்.