இதெல்லாம் வேலைக்கு ஆகாது... ஓடிடி பக்கம் திரும்பிய சசிகுமார்
இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி வருபவர் தான் சசிகுமார். கைவசம் பல படங்களை வைத்துள்ள சசிகுமார் ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி உள்ள உடன்பிறப்பே படத்தில் ஜோதிகாவின் அண்ணனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 14 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சசிகுமார் அவரின் அடுத்த படத்தையும் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
அதன்படி அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் ராஜவம்சம். நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, தம்பி ராமையா, யோகிபாபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா காரணமாக படத்தின் வெளியீட்டு தள்ளி சென்றது. பின்னர் அக்டோபர் 14 ஆம் தேதி ஆயுத பூஜைக்கு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் தற்போது டாக்டர் படம் வெளியாகி உள்ளது. அதேபோல் அக்டோபர் 14 ஆம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 3 படமும் வெளியாக உள்ளதால் தியேட்டர்கள் கிடைக்காது என்று கருதி மீண்டும் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ராஜவம்சம் படம் திரையரங்குகளில் அல்லாமல் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளி சென்றே போவதால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் ராஜவம்சம் படத்தை 13 கோடிக்கு வாங்கியுள்ளதாகயும் தகவல்கள் கசிந்த வருகிறது.
அதுமட்டுமின்றி ராஜவம்சம் படத்தை தியேட்டரில் வெளியிட்டால் இந்த அளவிற்கு வசூல் வராது என்பதால் வந்த வரைக்கும் லாபம் என படக்குழுவினர் படத்தை ஓடிடிக்கு விற்பனை செய்துவிட்டதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.