சூர்யாவின் ரெட்ரோ சோலோ ரிலீஸ் கிடையாது!.. போட்டியாக யாரு களமிறங்குறா பாருங்க!..

#image_title
மே 1ம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளன்று சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியாகும் என சில மாதங்கள் முன்பே அறிவித்துவிட்டனர். வேறு எந்தவொரு படமும் ரெட்ரோ படத்துக்குப் போட்டியாக வெளியாகாது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் அதே நாளில் திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கு இடையே தான் தற்போது போட்டி உருவாகியுள்ளது.

2டி எண்டர்டெய்ன்மண்ட் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா கடைசியாக நடித்து வெளியான கங்குவா திரைப்படம் விமர்சன ரீதியாக நெகடிவ் கமெண்டுகளை பெற்று பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் முதல் பாடல் கனிமா வெளியாகியிருந்தது. அப்பாடலுக்கு சூர்யா, பூஜா ஹெக்டே ,மற்றும் சந்தோஷ் நராயண் நடமாடியிருந்தனர். பட்டித்தொட்டியெங்கும் தற்போது அந்த பாடல் தான் டிரெண்டாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தை போலவே சூர்யாவின் ரெட்ரோ படமும் சோலோ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நாளில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியாகவுள்ளது. காமெடி கலந்த குடும்ப கதையுடன் எடுக்கப்பட்ட இப்படத்தில் சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரெட்ரோ மற்றும் டூரீஸ்ட் ஃபேமிலி என இரு படங்களும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு போட்டியாக சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி களமிறங்கியுள்ளது. இதனால், சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவாகும் என்கின்றனர். மேலும், சில படங்களும் மே 1ம் தேதி ரிலீஸை குறிவைக்க ரெடியாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.