Connect with us
simbu

Cinema News

இந்தப் படத்துல சிம்புதான் நடிக்க வேண்டியது!.. ‘அயோத்தி’ வெற்றி விழாவில் வருத்தப்பட்டு பேசிய சசிகுமார்!..

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக வந்து சேது படத்தில் தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் இயக்குனர் சசிகுமார். அதன் பிறகு முதன் முதலில் ‘சுப்பிரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடித்திருப்பார்.

அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்த சசிகுமார் ஹீரோவாக களமிறங்கி ஒரு சில படங்களில் சறுக்கல்களை சந்தித்தார். அவர் நடிப்பில் வந்த பெரும்பாலான படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பேட்ட’ என்ற படத்தில் ரஜினிக்கு நண்பராக வந்து தன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதன் பிறகு சமீபத்தில் ‘அயோத்தி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் சசிகுமார். அந்தப் படத்தை இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார்.

எந்த ஒரு புரோமோஷனும் இல்லாமல் சத்தமே இல்லாமல் படம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி முதல் இரண்டு நாள்கள் மெதுவாக நகர்ந்தது. அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் இருந்து படத்தை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
சசிகுமாரை பாராட்டதவர்களே இல்லை. கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய சசிகுமாரை பார்த்து விட்டோம் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகை சார்ந்த பிரபலங்களையும் அயோத்தி படம் மிகவும் கவர்ந்தது. இந்த நிலையில் படத்தின் 50வது விழாவை நேற்று படக்குழுவினர் கொண்டாடினார்கள். அப்போது பேசிய சசிகுமார் சேது, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் மாதிரியே அயோத்தி படமும் முதல் வாரத்தில் தொய்வை தான் ஏற்படுத்தியது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து படம் நல்ல ஒரு ரீச்சை எட்டியது. எனக்கு மிகவும் நம்பிக்கையாகத்தான் இருந்தது என கூறினார்.

ஆனாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருந்தது என்று கூறினார். ஏனெனில் பாலசந்தர், பாலுமகேந்திரா சார் இருந்திருந்தால் படத்தை தைரியமாக போட்டுக் காட்டியிருப்பேன், அவர்கள் இப்போது இல்லாதது தான் எனக்கு மிகப்பெரிய கவலை என்றும் கூறினார். மேலும் படத்தை பார்த்து ரஜினி சார் போன் செய்து வாழ்த்தினார், ஆனால் அதை நாங்கள் வெளியில் சொல்லவில்லை, அதன் பிறகு ரஜினி சாரே டிவிட்டரில் படத்தை பாராட்டி போட்டது மிகப்பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்று கூறினார்.

இதையும் படிங்க : டி.ராஜேந்தருக்கு உதவிய பிரபல காமெடி நடிகர்… நன்றி கடனாக என்ன செய்தார் தெரியுமா?

மேலும் சிம்புவும் படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டினார். என்னுடைய முதல் படமான சுப்பிரமணியபுரம் படத்தில் சிம்புதான் நடிக்க வேண்டியது, ஆனால் அது முடியாமல் போய்விட்டது, அவர் பேசும் போது எனக்கு அதுதான் நியாபகம்
வந்தது என கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top