தியேட்டரில் விக்ரமிடம் அமீர் சொன்ன அந்த வார்த்தை!.. அட அப்படியே நடந்துச்சே!...

by சிவா |
ameer
X

ameer

சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர், இயக்குனர் அல்லது நடிகரின் மகனாக இருந்தால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சுலபமாக கிடைத்துவிடும். இப்போது முன்னணியில் இருக்கும் பல நடிகர்கள் அப்படி வந்தவர்கள்தான். அதேநேரம், சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வருபவர்களுக்கு வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை.

வாய்ப்பு தேடி அலைந்து, தட்டு தடுமாறி, அவமானங்களை சந்தித்து, ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்து, தொடர் முயற்சிகள் செய்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி வாய்ப்பு கிடைத்தால் அது வெற்றிப்படமாக அமைய வேண்டும். இவ்வளவு கடினமானதுதான் சினிமா. ஆனால், எல்லாம் சரியாக அமைந்துவிட்டால் வேறு மாதிரியான வாழ்க்கையை சினிமா கொடுக்கும். அதுவரை எல்லாமே கஷ்டம்தான்.

vikram

vikram

தமிழ் சினிமாவில் அப்படி கஷ்டப்பட்டு மேலே வந்த நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். பல வருடங்கள் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்பாஸ், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமாக்களில் சுரேஷ் கோபி போன்ற நடிகர்களுக்கு தம்பியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர்தான் சேது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அவரின் வாழ்க்கை மாறியது.

Sethu2

பாலா இயக்கிய இப்படத்தில் இயக்குனர் அமீரும், நடிகர் மற்றும் இயக்குனருமான சசிக்குமாரும் உதவி இயக்குனர்களாக வேலை செய்தனர். ஒருமுறை விக்ரம், சசிக்குமார் மற்றும் அமீர் ஆகிய மூன்று பேரும் படையப்பா படம் பார்க்க சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு சென்றார்களாம். அப்போது, நடிகர்கள் ப்ரீமியர் காட்சி பார்த்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்தார்களாம். அதை சோகமாய் விக்ரம் பார்க்க அங்கிருந்த அமீர் ‘கவலைப்படாதீங்க சார். சேது படம் வெளியான பின் நீங்களும் இதே போல காரில் வருவீர்கள்’ என சொன்னாராம். அவர் கூறியது போலவே அப்படத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து பெரிய ஸ்டாராக விக்ரம் மாறினார்.

இந்த தகவலை ஒரு பேட்டியில் நடிகர் சசிக்குமார் பகிர்ந்துள்ளார்.

Next Story