மொத கேமிரா முன்னாடி முகத்த காமி!- சசிக்குமாரை காண்டாக்கிய பத்திரிக்கையாளர்!

by Rajkumar |
மொத கேமிரா முன்னாடி முகத்த காமி!- சசிக்குமாரை காண்டாக்கிய பத்திரிக்கையாளர்!
X

தமிழில் பிரபலமான இயக்குனரும், நடிகருமாக இருந்து வருபவர் சசிக்குமார். பெரிய ஹீரோக்கள் அளவு இல்லாவிட்டாலும் கூட இவரது திரைப்படங்களுக்கும் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் இவர் நடித்துள்ள அயோத்தி என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.

ஆரம்பக்கட்டத்தில் சசிக்குமார் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது அவருக்கு பல படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்தன. அவற்றில் சுப்ரமணியப்புரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் 2022 இல் வெளிவந்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறும் படங்களாக அமையவில்லை.

இதனையடுத்து கடந்த மார்ச் 3 ஆம் தேதி சசிக்குமார் நடித்த அயோத்தி திரைப்படம் வெளியானது. படத்தின் பெயரே சர்ச்சையை கிளப்பும் பெயராக இருந்தாலும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியானது முதலே நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படம் குறித்து சசிக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கும்போது அதில் ஒருவர் “சார் படத்தில் வட நாட்டு தொழிலாளர்களுக்கு எல்லாம் தமிழ்நாட்டில் உதவி செய்றதா சொல்றாங்க, ஆனால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு அந்த அளவுக்கு பாதுக்காப்பு இல்லையே சார்?” என கேட்டார். உடனே கோபமடைந்த சசிக்குமார், முதலில் கேமிரா முன்னாடி முகத்தை காமி என அந்த நபரை இழுத்து, பாருங்க மக்களே இந்த கேள்வியை கேட்டவர் இவர்தான் என கூறினார்.

அதன் பிறகு அவரது கேள்விக்கு பதில் அளிக்கும்போது “நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான விடை படத்திலேயே இருக்கிறது” என கூறினார்.

Next Story