Connect with us

அசத்தலான கதையில் விஜயகாந்த் மகன்…நைசா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சசிகுமார்…!

sasi_main_cine

Cinema News

அசத்தலான கதையில் விஜயகாந்த் மகன்…நைசா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சசிகுமார்…!

நடிரும் இயக்குனருமான சசிகுமார் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தை இயக்கும் பணியில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். அதுவும் நம்ம கேப்டன் மகன் சண்முக பாண்டியனை வைத்து அந்த படத்தை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அந்த படம் எழுத்தாளர் ராமமூர்த்தி எழுதிய வரலாற்று பதிப்பான “ குற்றப்பரம்பரை” எனும் நாவலை தழுவியதாக அமைய இருக்கிறதாம். ஏற்கெனவே இந்த நாவலை அடிப்படையாக கொண்டு படம் எடுக்க நினைத்தவர்கள் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் பாலா. ஆனால் இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருப்பதால் கை நழுவி இப்பொழுது சசிக்குமாரிடம் வந்து சேர்ந்துள்ளது.

sasi2_cine

இந்தக் கதையை இயக்குநர் பாண்டிராஜ் கூட இயக்குவதாக பேச்சு எழுந்தது. அவர் இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கூட இந்த நாவலை சூர்யா படிப்பதாகக் காட்டியிருப்பார். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க இருக்கிறாராம். ஆனால் இந்த “குற்றப்பரம்பரை” படமாக வரவில்லையாம். வெப் தொடராக வரவிருக்கிறதாம். அதற்காக பிரபல ஓடிடி தளத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

sasi3_cine

மேலும் இந்த வெப் தொடரில் சசிகுமாரும் நடிக்கிறாராம் அவருடன் சேர்ந்து தான் விஜயகாந்த் மகனும் நடிக்க உள்ளார். இந்த தொடருக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாம். படத்திற்கான வசனத்தை இந்த நாவலை எழுதிய ராமமூர்த்தியே எழுதுவார் என்ற தகவலும் வெளியானது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top