மீண்டும் காமெடியனா சும்மாவா? சந்தானம் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Santhanam: தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல நகைச்சுவை நடிகனாக தடம் பதித்தவர் நடிகர் சந்தானம். இவரை வெள்ளி திரைக்கு அறிமுகம் செய்து வைத்தது சிம்பு .லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமான சந்தானத்தை தன் படத்தின் மூலம் முதன் முதலாக ஒரு காமெடியனாக அறிமுகம் செய்து வைத்தார் சிம்பு.
அதிலிருந்து சிம்புவின் பல படங்களில் சந்தானத்தை பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் வடிவேலு, விவேக் இவர்களுக்கு அடுத்த இடத்தில் சந்தானம் பார்க்கப்பட்டார் .இவருடைய எதார்த்தமான காமெடியும் இவர் பேசும் வசனமும் மக்களை வெகுவாக கவர்ந்தது. இப்படியே காமெடியனாக எத்தனை நாள் தான் இருப்பது என உணர்ந்த சந்தானம் திடீரென ஹீரோவாக உருவெடுத்தார்.
இவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேலாக இவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இன்னொரு பக்கம் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படத்தில் விஷாலுக்கு காமெடியனாக நடித்திருந்தார் சந்தானம் .
அந்த படம் இப்போது ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டர் வெற்றியும் அடைந்தது. அதில் சந்தானத்தின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஹீரோவாக வேண்டாம். காமெடியனாகவே மீண்டும் நடிக்க வாருங்கள் என சந்தானத்திற்கு வேண்டுகோள் வைத்தனர் .இருந்தாலும் சந்தானம் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருந்தது .

ஆனால் சிம்பு நடிக்கும் ஒரு படத்தில் சந்தானம் காமெடியனாக ரீ எண்ட்ரி கொடுக்கிறார் என்ற ஒரு தகவல் மட்டும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. ஓரளவுக்கு அது உறுதிப்படுத்தும் தகவலாகவே பார்க்கப்படுகிறது .அந்த படத்திற்கு சந்தானம் 13 கோடி சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு தயாரிப்பு தரப்பிலும் சம்மதித்து விட்டார்களாம். அதில் ஏழு கோடி அட்வான்ஸ் ஆக சந்தானத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது .அதனால் சிம்பு சந்தானம் காம்போ மீண்டும் பெரிய திரையில் எந்த அளவு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.