டேய்!..உனக்கு குழந்தை இருக்குடா!...நடிகையிடம் ஜொள்ளு விட்ட சதீஷை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!...

by Manikandan |
டேய்!..உனக்கு குழந்தை இருக்குடா!...நடிகையிடம் ஜொள்ளு விட்ட சதீஷை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!...
X

தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் படங்களில் அதிகமாக காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். விஜய் நடித்த கத்தி, பைரவா படங்களிலும் இவர் முன்னணி காமெடியனாக வலம் வந்துள்ளார்.

sathish

இவர் இணையத்திலும் எப்போதும் பிஸியாக இருக்கும் நபர். தனது நண்பர்கள், நடிகைகள் என யார் இணையத்தில் எந்த பதிவு போட்டாலும், தனக்கே உரிய பாணியில் கமெண்ட் அடிப்பதில் கில்லாடி.

அண்மையில் பிரியா பவானி சங்கர், தான் ஹீரோயினாக நடித்து வரும் அகிலன் படத்தில் வரும் போலிஸ் கதாபாத்திரத்திற்கான உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த சதீஷ், உடனே, ' நான் எந்த ஸ்டேஷனில் அரெஸ்ட் ஆக வேண்டும்?' என்று பதிவிட்டு விட்டார்.

இதையும் படியுங்களேன் - வெற்றிமாறனுக்கு கால் பண்ணி முட்டாள் தனமாக நடந்து கொண்டேன்.! விக்ரம் 'ஹாஹூ' பிரபலம் ஓபன் டாக்.!

இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், 'டேய் பரமா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. குழந்தை இருக்குது.' என்று பதிலடி கொடுத்து கமெண்ட் செய்துவிட்டார். உண்மையில் சதிஷுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

ஆனால், இவர் வேண்டுமென்றே பிரியா பவானிசங்கரிடம் சொல்லிவிடவில்லை. பிரியா பவானி சங்கர் உடன் ஏற்கனவே ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்துள்ளார் சதீஷ். அதன் காரணமாக இருவருக்கும் நட்பு உருவாகி உள்ளது. அதனால் இந்த புகைப்படத்திற்கு அவர் கமெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story