ஏலே வாய வச்சிக்கிட்டு சும்மா இருலே! சதீஷை வச்சு செய்யும் சினிமா பிரபலங்கள்...
தமிழ் பிரபலங்கள் சிலர் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காம, நானும் பேசுகிறேன் மோடில் எதையாவது பேசி இணையவாசிகளிடம் தொடர்ந்து கலாய் வாங்கி வருபதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்த முறை அந்த ஆப்பில் சிக்கி இருப்பது நடிகர் சதீஷ்.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக இருப்பவர் சதீஷ். கவுண்டர் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் சதீஷிற்கு நேரம் சரியில்லாமல் போக தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ், சன்னி லியோன், தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சதீஷ், பாம்பேயில் இருந்து வந்த சன்னி அழகா புடவையில் வந்திருக்காங்க. கோயமுத்தூரில் இருந்து வந்திருக்கும் தர்ஷா குப்தா எப்படி வந்திருக்காங்க என காமெடியாக கூறிகிறேன் என வாயை விட்டு விட்டார். இதற்கு தற்போது பல பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான் என ட்வீட் செய்திருக்கிறார். தொடர்ந்து, சின்மயி உண்மையில் ஒரு பெண்ணை சுட்டிகாட்டி, கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடை அணியாத ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணால் ஒரு கூட்டத்தின் முன் எளிதாக கேட்க முடியும். ஆண்களின் இந்த நடத்தை எப்போது நிறுத்தப்படும்? என்று பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், பிரபலங்களும் பலரும் கொதித்தெழுந்து இப்படி ஸ்டேட்டஸ்களை தட்டிக்கொண்டு இருக்க, எப்பா சாதாரணமா சொன்னேன். இதில் எந்த நோக்கமும் இல்லை என சதீஷ் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.