நடிகையிடம் கெஞ்சும் சதீஷ்! இவரே பெரிய கடலை மன்னன் ஆச்சே
பொதுவாக மலையாள நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்களின் மனதில் சிறப்பு இடம் உண்டு. அந்தவகையில் நடிகை பாவனா, அமலா பால், மாளவிகா மோகனன், அசின், நயன்தாரா, நஷ்ரியா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு ரசிகர்கள் மனதில் என்றுமே நீங்காத இடம் உண்டு.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை அனேகா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 'ரக்ஷஅதிகாரி பைஜூ' என்ற மலையாளப்படத்தின் மூலம் நாயகியானார். இதன்பின் கடந்த 2019ல் ஹிப்காப் ஆதி நடித்த 'நட்பே துணை' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்திலும் இவர் கேரளப்பெண்ணாகவே நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ஆதியை விட இவருக்கே ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதில் தனது வசீகரமான தோற்றத்தால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார்.
இதன்பின் சமீபத்தில் சந்தானத்துடன் இவர் நடித்திருந்த டிக்கிலோனா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம் தவிர தெலுங்கிலும் இவர் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் சைமா விருது வழங்கும் வில்லா நடைபெற்றது.
இதில், நட்பே துணை படத்தில் நடித்தற்காக சிறந்த அறிமுக நடிகை விருது இவருக்கு வழங்கப்பட்டது. விருதுடன் தான் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த இவர் தனது நண்பர்கள் அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தின் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு மற்றும் நடிகர் ஆதிக்கும் நன்றியை தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த பதிவில் கமெண்ட் செய்துள்ள காமெடி நடிகர் சதீஷ், நீங்கள் எனக்கும் நன்றி சொல்ல வேண்டும். எதற்காக என்பதற்கான காரணம் உங்களுக்கே தெரியும் என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள், இவரே பெரிய கடலை மன்னம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Hello Say thanks to me @AnaghaOfficial Of course u know the reason 🤨🤨 https://t.co/k2LUuZRLaN
— Sathish (@actorsathish) October 13, 2021