சத்யா மூவீஸ் தயாரிப்பில் ஜொலித்த படங்கள் - ஒரு பார்வை

by sankaran v |   ( Updated:2023-02-27 18:48:40  )
சத்யா மூவீஸ் தயாரிப்பில் ஜொலித்த படங்கள் - ஒரு பார்வை
X

Baasha

தமிழ்த்திரை உலகில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சொந்தமாக ஒரு பட நிறுவனத்தைத் தொடங்கினார். அதுதான் சத்யா மூவீஸ்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். 6 படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கமல், ரஜினி உள்பட பிற நடிகர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் தான்.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

இதயக்கனி

Idhayakani

1975ல் வெளியான படம். ஜெகந்நாதன் இயக்கியுள்ளார். எம்ஜிஆர்., ராதாசலுஜா, வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் சீனிவாசன், மனோகர், பண்டரிபாய், உசிலை மணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. நீங்க நல்லா இருக்கணும், தொட்ட இடம் எல்லாம் என்ற பாடல் இந்த படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

காவல்காரன்

1967ல் ப.நீலகண்டன் இயக்கிய படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவகுமார், நம்பியார், அசோகன், வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா மற்றும் பண்டரிபாய் நடித்த படம்.

எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர். தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டதும் இந்த ஆண்டில் தான்.

இந்தப்படத்தில் இருந்து தான் எம்ஜிஆரின் குரல் மாறிப்போனது. நினைத்தேன் வந்தாய், மெல்லப்போ, கட்டழகு தங்கமகள், காது கொடுத்துக் கேட்டேனன், அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன் ஆகிய முத்தான பாடல்கள் உள்ளன.

மூன்றுமுகம்

1982ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஏ.ஜெகந்நாதன். இந்தப்படத்திற்கான கலையகத்தை சத்யா மூவீஸ் கவனித்துக் கொண்டது.

ரஜினி, ஜெய்கணேஷ், செந்தாமரை, தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், சத்யராஜ், ராதிகா, சில்க் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாம்பிரதம், நான் செய்த குறும்பு உள்பட பல பாடல்கள் உள்ளன. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினியின் ஸ்டைல் படத்தில் செம மாஸாக இருக்கும்.

காக்கி சட்டை

Kaakisatttai

இந்தப்படத்திற்கான விநியோகம் சத்யா மூவீஸ். கதையை சத்யா மூவீஸ் குழு கவனித்தது. கமல், அம்பிகா, மாதவி, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் செம.

இது ஒரு வெள்ளிவிழா படம். கண்மணியே பேசு, நம்ம சிங்காரி சரக்கு, பூ போட்ட தாவணி, வானிலே தேனிலா, பட்டுக்கன்னம் என்ற 5 டாப்பான பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

பாட்ஷா

1995ல் வெளியான படம். ரஜினி, நக்மா, ரகுவரன், சரண்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். கதை மற்றும் இயக்கத்தை சுரேஷ் கிருஷ்ணா கவனித்துக் கொண்டார்.

தேவாவின் தெவிட்டாத இசையில் நான் ஆட்டோக்காரன் பாடல் ரசிகர்களுக்கு செம விருந்து. ரஜினியின் ஸ்டைலுக்காகவே வந்த படம். அதனால் தான் படத்திலேயே ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் உள்ளது.

Next Story