கங்குவா பட சர்ச்சை.. பெர்ஷனல் வரைக்கும் போனது தப்பு! சத்யராஜ் பகிர்ந்த தகவல்

Published on: November 25, 2024
kanguva 1
---Advertisement---

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. சூர்யாவின் கேரியரிலேயே அதிக விமர்சனத்தை சந்தித்த படமாக இந்த படம் அமைந்தது. அதற்கு காரணம் படத்தின் மீது வைத்திருந்த அதிக எதிர்பார்ப்புதான். அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஒட்டுமொத்த படக்குழு தான். பட ப்ரோமோஷனின் போது கங்குவா படத்தை பற்றி பெரிய அளவில் பேசினார்கள்.

அதாவது படம் 2000 கோடி வசூல் பெரும் .தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு போகும் படமாக இது அமையும் என மிகப் பெரிய பில்டப்பை ஒட்டுமொத்த படக்குழுவும் ஏற்படுத்தினர். அந்த ஒரு எதிர்பார்ப்புடனே படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாந்து போனார்கள். இது ஒரு பக்கம் இருக்க கங்குவா படத்தின் தோல்விக்கு படத்தை ரிவ்யூ பண்ணவர்கள் தான் காரணம் என திருப்பூர் சுப்ரமணியன் கூறுகிறார்.

இதையும் படிங்க: கமலுடன் இணைந்து நடிக்கும் காட்சி… 100 முறை ரஜினி சொல்லிப் பார்த்த வசனம்…! அட அந்தப் படமா?

அதனால் இனிமேல் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரத்திற்கு படத்தை பற்றி யாரும் விமர்சிக்க கூடாது என்ற வகையில் அவர் பேசியிருந்தார் .இதைப்பற்றி நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சத்யராஜிடம் கேட்டபோது அவர் அவருடைய கருத்தை கூறியிருந்தார். அதாவது ஒரு படத்தைப்பற்றி ரிவ்யூ பண்ணுவது பத்திரிக்கையாளருடைய உரிமை.

அதை நான் இல்லை என்று சொல்லல. ஆனால் வேண்டுமென்றே அதிக ஃபோக்கஸ் செய்து அடிக்கணும்ங்கிற குறியோடு பண்றது தவறானது. அது இந்தப் படத்தில் தெளிவாக தெரிந்தது. ஒரு படம் புடிச்சது புடிக்கலைங்கிறது வேற. ஆனால் கரம் கட்டி அடிக்கிறது என்கிறது வேற .இந்த மாதிரி கங்குவா படத்திற்கு வந்தது.

இதையும் படிங்க:Good Bad Ugly: வீரம் படத்தின் செண்டிமெண்ட்.. அஜித்தை கவுத்திய டிஎஸ்பி.. ஆனா நடந்ததோ? திடீர் மாற்றத்துக்கு காரணம்

ஏனெனில் படம் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது தனி மனிதனுடைய உரிமை. அதில் எந்தவித மாறுபாடும் கிடையாது. ஆனால் இந்த படத்திற்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதோடு படத்தின் ரிவ்யூவையும் தாண்டி பர்சனல் ஆக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை டார்கெட் செய்து அடிப்பது எப்படி சரியா வரும். இது ரிவ்யூவுக்குள் எப்படி வரும். இதுக்கும் ரிவ்யூவுக்கும் என்ன சம்பந்தம்? என கேட்டிருக்கிறார் சத்யராஜ்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.