
Cinema History
சத்யராஜ் ஒரே நாளில் நடித்துக்கொடுத்த சூப்பர் ஹிட் திரைப்படம்… நம்பவே முடியலையேப்பா!!
சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “முதல் மரியாதை”. இதில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த மலைச்சாமி என்ற கதாப்பாத்திரம் காலத்துக்கும் பேசப்படும் கதாப்பாத்திரமாக அமைந்தது.
இதில் சிவாஜி கணேசனுடன் ராதா, வடிவுக்கரசி, ரஞ்சினி, ஜனகராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதில் சத்யாராஜ் மயில்வாகனம் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Muthal Mariyathai
மயில்வாகனம் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக சத்யராஜ்ஜை, சித்ரா லட்சுமணன் அணுகியபோது சத்யராஜ் மிகவும் பிசியாக இருந்தாராம். கிட்டத்தட்ட 30 படங்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்து வைத்திருந்தாராம்.
அப்போது சித்ரா லட்சுமணன் ஒரு யோசனையை சொன்னாராம். அதாவது வழக்கமாக சென்னையில் ஒரு மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை ஷூட்டிங் கிடையாது. ஆதலால் அன்று ஒரு நாள் மட்டும் மைசூருக்கு வந்து நடித்துக்கொடும்படி கேட்டுக்கொண்டாராம் சித்ரா லட்சுமணன். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் அவரே செய்தாராம்.
இதையும் படிங்க: மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்… ஆத்தாடி மறுபடியுமா??

Sathyaraj
அதன்படி “முதல் மரியாதை” திரைப்படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடித்துக்கொடுத்தாராம் சத்யராஜ். ஆனால் அத்திரைப்படத்தை பார்த்தபோது சத்யராஜ் இடம்பெற்ற காட்சிகள் எல்லாம் ஒரே நாளில் எடுக்கப்பட்டது போல் தெரியாது என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.