தலைவரே இத நான் வச்சிக்கட்டுமா.?! எம்.ஜி.ஆரிடம் உரிமையாக அதை கேட்ட சத்யராஜ்.!
தனது நடிப்பு திறனால், தமிழை தாண்டி மற்ற இந்திய மொழிகளிலும் தடம் பதித்துள்ள நடிகர் என்றால் அதில் சத்யராஜ் மிக முக்கியமானவர். அவர் ஏற்று நடித்த அமாவாசை முதல் கட்டப்பா வரை பல கதாபாத்திரங்கள் இன்று வரை ரசிகர்களின் பேவரைட். தான்.
அவர் தீவிர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர். அதனை பல மேடைகளில் அவரே பெருமையாக பேசுவார். அவரை பார்த்து தான் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்து சென்னைக்கு ரயில் ஏறியதாக குறிப்பிட்டு சொல்வார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆரின் தீவிர வெறியர் என்று கூட சொல்லலாம்.
அவர் எம்.ஜி.ஆரை சந்தித்ததை பற்றி பல முறை கூறியுள்ளார். அப்போது, எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு, அவரது ஞாபகார்த்தமாக ஏதேனும் ஒன்று வேணும் என் சத்யராஜ் கேட்டுள்ளார். உடனே ,அருகில் இருந்த கர்லா கட்டையை தான் எடுத்துகொள்ளவா என கேட்டுள்ளார். அதனை எம்ஜிஆர் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கவே,
இதையும் படியுங்களேன் - என்னையா உன் வீட்டுல கண்ணாடி இல்லையா.?! சிவாஜி அசிங்கப்படுத்திய சூப்பர் ஹிட் ஹீரோ.!
உடனே அதனை எடுத்து கொண்டு வந்துவிட்டாராம். இன்று வரை எம் ஜி ஆர் நினைவாக அவர் வைத்துள்ள அந்த கர்லா கட்டையை பத்திரமாக வைத்து உடற்பயிற்சி செய்து வருகிறாராம். மேலும் பல பரிசுகள் எம்.ஜி.ஆர் நினைவாக அவர் வைத்துள்ளாராம்.
சத்யராஜ் ஆரம்ப காலகட்ட மேடை பேச்சுகளிலும் சரி, அவரது படங்களிலும் சரி தன்னை ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாக எப்போதும் காட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் கடைசி வரை அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வராமலே போய் விட்டது.